தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/துன்பங்களை துரத்துவோம்!

துன்பங்களை துரத்துவோம்!

துன்பங்களை துரத்துவோம்!


செப் 06, 2016 12:00 AM

செப் 06, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 06, 2016 12:00 AM செப் 06, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியவில்லை? நான் எதை தொட்டாலும் விளங்க மாட்டேங்கிறது! அடிமேல் அடி! ஒண்ணத் தொட்டு ஒண்ணு வந்துகிட்டே கிடக்கு! இப்படி புலம்புவதை நிறுத்துங்கள்.

துன்பத்தை கண்டு ஓடுவதால், துன்பம் விலகுவது இல்லை. துன்பத்தை எதிர்ப்பதற்கு உங்களை தயார் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். எல்லையில்லா ஆற்றல் பெற்றவர்கள் நாம் என்பதை மறந்துவிடாதீர்கள்!

துன்பங்கள் வாழ்வின் ஒரு பகுதி. துன்பம் இல்லாமல் வாழ்வு அமைவதில்லை. நாம் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி மட்டுமே கிட்ட வேண்டும் என்று நினைத்து செயல்படுகிறோம். அது தான் பிரச்சனை! வெற்றி பெற்றால் இன்பம் தான்! ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் ஏற்படும் தோல்வி துன்பத்தை தருமானால், அதற்காக வருத்தம் கொள்ள வேண்டியதில்லை.

எப்போதும் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிடாது, துணிச்சலோடு, தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். துன்பங்கள் தூள் தூளாகி காணமல் போய்விடும்! அதன் பின் வெற்றி கனிகளை எளிதாக பறித்துவிடுவீர்கள்!

நகைச்சுவை நடிகர் சாப்ளின் வாழ்க்கையை பாருங்கள்! இளமையில் அவரது பெற்றோர்கள் பிரிந்து விட்டனர். தாயின் அரவணைப்பில் வாழ்ந்தார். வறுமை வாட்டி எடுத்தது. கல்யாண வீடுகளில் பாடினார். தந்தையின் பிரிவு, வறுமை, பசி என அனைத்து வருத்தத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தான் பாடும் பாடலில் குரல் வழியாக புதுமையை புகுத்தினார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றார். கணவன் இன்றி வாழ்ந்த சாப்ளினின் தாய் பைத்தியமானார்.

சாப்ளினின் காதலி அவரை கைவிட்டு விட்டாள். தொடர்ந்து அவருக்கு துக்கம். ஆனாலும் சாப்ளின் துவண்டு விடவில்லை. சாப்ளின் தன் நடிப்பு தொழில் மேல் கொண்ட பக்தி காரணமாக, எல்லா துக்கங்களையும் மறந்து, அனைத்து நடிகர்களும் திரையில் பேசி நடிக்கையில்,  செய்கை மூலமாகவே பேசாமல் திரையில் நடித்து, மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். இன்றும் வரலாற்றில் இடம் பிடித்து வாழ்கின்றார்! 

நீங்கள் எடுக்கும் தொடர் முயற்சிகள் தோல்வி அடையுமானால், அதற்காக நொந்து கொள்ள வேண்டாம்! துன்பமான தருணங்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள், உங்களுக்கு சிறந்த அனுபவத்தை பெற்று தருகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்! துன்பப்படுவதால் எந்த பயனும் இல்லை. துன்பங்களை ஏற்றுக் கொள்வதில் தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது!

துன்பத்தில் இருக்கும் போது நமது பகுத்தறிவு வேலை செய்வதில்லை. துன்பங்களை கண்டு பயந்து ஓடாமல், அவற்றை எதிர்கொள்ளும் அறிவினை வளர்த்து கொள்வோம். வெற்றியினை நோக்கி பயணிப்போம்!

-க.சரவணன், மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us