தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அற்புதமான இந்திய மருத்துவப் படிப்புகள்!

அற்புதமான இந்திய மருத்துவப் படிப்புகள்!

அற்புதமான இந்திய மருத்துவப் படிப்புகள்!


ஆக 29, 2016 12:00 AM

ஆக 29, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 29, 2016 12:00 AM ஆக 29, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நவீன மருத்துவத் துறையில் பல்வேறு தொழில்நுட்ப யுக்திகள் பின்பற்றப்பட்டாலும், இந்திய பாரம்பரியம் மிக்க மருத்துவ முறைகளுக்கு எப்போதும் தனித்தன்மை உண்டு!

உடலுக்கு கேடு விளைவிக்காத, பக்க விளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவ முறையை பின்பற்றி, இயற்கையோடு இணைந்து வாழ இந்திய மருத்துவ படிப்புகள் உதவுகின்றன. இந்திய மருத்துவத்தின் பயன்கள், இன்றைய இளம் தலைமுறையினரால் நன்கு உணரப்பட்டு வரும் நிலையில், இத்துறை சார்ந்த படிப்புகள், எதிர்கால வாய்ப்புகளை பிரகாசமாக்குவதோடு மட்டுமின்றி, பணி திருப்தியையும் அளவில்லாமல் தருகின்றன!

இளநிலை பட்டப்படிப்புகள்

பி.எஸ்.எம்.எஸ்., - சித்த மருத்துவம் மற்றும் சிகிச்சை: நாக்கின் நிறம், குரல், கண்கள் பார்த்தும், நாடி பிடித்தும் மற்றும் தொடுதல் மூலமாகவும் நோய்களை அறிந்து தாவரங்கள், பட்டை வேர்கள், விலங்குகளின் தாதுக்கள் மூலம் நோய்களுக்கு சிகிச்சை அழிக்கும் முறைகளை செயல்முறைகள் மூலம் விளக்கும் பட்டப் படிப்பு தான் பி.எஸ்.எம்.எஸ்.,!

பி.ஏ.எம்.எஸ்.,- ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சிகிச்சை: மிகவும் பழமையான மருத்துவ முறையான ஆயுர்வேத மருத்துவத்தில், உலோகங்கள், தாதுக்கள், மூலிகைகள், உள்ளிட்டவற்றை பயன்படுத்தி எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பதை கற்று கொடுக்கும் சிறந்த படிப்பு.

பி.என்.ஒய்.எஸ்.,- நேச்சுரோபதி மற்றும் யோகிக் சயின்சஸ்: இயந்திரம் போல் நாம் சுழன்று கொண்டிருப்பதால், உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு ஏற்படும் நிலை உண்டாகிறது. இவற்றில் இருந்து நம் உடலையும், மனதையும் பாதுகாக்க, இயற்கை உணவு, இயற்கையோடு இணைந்த பழக்க வழக்கங்கள், யோகப் பயிற்சி அடிப்படையிலான மருத்துவ முறைகளை எவ்வாறு எளிய முறையில் பயன்படுத்துவது என்று விவரிக்கும் படிப்பே பி.என்.ஒய்.எஸ்.,!

பி.எச்.எம்.எஸ்.,- ஹோமியோபதி மருத்துவம் மற்றும் சிகிச்சை: இயற்கை பொருள்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகளில் இருந்து மருந்துகள் தயாரிப்பது போன்ற இயற்கை கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ முறைகளை பி.எச்.எம்.எஸ்., பட்டப் படிப்பை படிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

பி.யு.எம்.எஸ்.,- யுனானி மருத்துவம் மற்றும் சிகிச்சை: இயற்கை மூலப் பொருள்கள் மற்றும் தாதுக்களை பயன்படுத்தி பல்வேறு தொற்றுநோய்களை தடுக்கும் வழிமுறைகளையும், உணவு கட்டுப்பாட்டு சிகிச்சை, ரெகிமென்டல் தெரப்பி உள்ளிட்டவற்றை அறிய உதவுகின்ற படிப்பு தான் யுனானி மருத்துவம்.

யார் படிக்கலாம்?
பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது விலங்கியல் போன்ற பாடங்களை முதன்மை பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அகில இந்திய அளவில் இப்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வும் நடத்தப்படுகிறது.

தமிழக கல்லூரிகள்
சென்னையில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் நாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி என மொத்தம் 6 அரசு கல்லூரிகள் உள்ளன.

இதேபோல 9 தனியார் ஹோமியோபதி கல்லூரிகள், 5 தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், 4 தனியார் ஆயுர்வேத கல்லூரிகள் மற்றும் 3 தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 21 தனியார் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன.

முதுநிலை படிப்புகள்:
சித்தா, ஹோமியோபதி, நேச்சுரோபதி மற்றும் யோக உள்ளிட்ட படிப்பில் எம்.டி., எனப்படும் முதுநிலை பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை மற்றும் நெல்லையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகள் இப்படிப்பை வழங்குகின்றன. நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us