தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மருத்துவ மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள்!

மருத்துவ மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள்!

மருத்துவ மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள்!


அக் 17, 2016 12:00 AM

அக் 17, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 17, 2016 12:00 AM அக் 17, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நவீன மருத்துவத்தில், முதுநிலை பட்டப்படிப்பு அல்லது சிறப்பு பட்டய படிப்பு படிக்க விரும்பும் மருத்துவ பட்டதாரிகள், தேசிய தேர்வுகள் வாரியம் (என்.பி.இ.,) நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

நுழைவுத்தேர்வுகள்

* நீட் - பிஜி: மாஸ்டர் ஆப் டாக்டர் (எம்.டி.,), மாஸ்டர் ஆப் சர்ஜரி (எம்.எஸ்.,) மற்றும் போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ போன்ற முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வே ‘நீட் - பிஜி’ எனும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு!

இத்தேர்வில் மாணவர்கள் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில், அகில இந்திய அளவில் 50 சதவீத மருத்துவ இடங்கள் நிரப்பப்படுகின்றன. மேலும், அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கான, மாணவர் சேர்க்கையும் இத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தகுதிகள்: இந்திய மருத்துவக் கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* நீட் - எம்.டி.எஸ்.,: மாஸ்டர் ஆப் டென்டல் சயின்ஸ் (எம்.டி.எஸ்.,) எனும் பல் மருத்துவ மேற்படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு தான் நீட் - எம்.டி.எஸ்.,!

அகில இந்திய அளவில் 50 சதவீத பல் மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த பொது நுழைவுத்தேர்வில், பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பி.டி.எஸ்., படிப்பில் சேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* சி.இ.டி. - எஸ்.எஸ்.,: மெடிக்கல், சர்ஜிகல், மற்றும் பீடியாட்ரிக்ஸ் ஆகிய பிரிவுகளில், சிறப்பு பட்டம் பெற, அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு தான், சி.இ.டி. - எஸ்.எஸ்., எனும், ‘சென்டர்லைஸ்டு எண்டரன்ஸ் டெஸ்ட் - சூப்பர் ஸ்பேஷாலிட்டி’ தேர்வு!

தகுதிகள்: இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் டிசம்பர் 12, 2016ம் தேதி நிலவரப்படி எம்.எஸ்., / எம்.டி., படிப்பில் பயிற்சியை நிறைவு செய்திருத்தல் அவசியம்.

*  பி.டி.சி.இ.டி.,: பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, உடலியல், மனநலம், மயக்கவியல், ரேடியோ தெரபி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு தான், ‘போஸ்டு டிப்ளமோ சென்டர்லைஸ்டு எண்டரன்ஸ் டெஸ்ட்’!

தகுதிகள்: ஏதேனும் ஒரு மருத்துவ துறை பிரிவில், ‘போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ’ படிப்பில் தேர்ச்சி பெற்று, 2 ஆண்டு பயிற்சியையும் நிறைவு செய்திருத்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: www.nbe.edu.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us