தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை!

வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை!

வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை!


அக் 22, 2016 12:00 AM

அக் 22, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 22, 2016 12:00 AM அக் 22, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உயர் கல்வியை வெளிநாட்டில் தொடர விரும்பும், சிறந்த இந்திய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது, பல்வேறு உதவித்தொகை திட்டங்கள்!

* டாடா உதவித்தொகை: அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கட்டடக்கலை மற்றும் கலை கல்லூரி, வேளாண்மை மற்றும் இயற்கை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்டவற்றில், இளநிலை பட்டப்படிப்புகளுக்கு, இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: இந்திய குடியுரிமை பெற்று, மேல்நிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கார்னெல் பல்கலைக்கழகத்தில் முழு நேரக் கல்வி முறையில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: www.cornell.edu

* டாக்டர் மன்மோகன் சிங் உதவித்தொகை: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், செயின்ட் ஜான் கல்லூரியில், முழு நேரக் கல்வி முறையில் அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி (பிஎச்.டி.,) படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கான சிறந்த உதவித்தொகை திட்டம் இது!

தகுதிகள்: 35 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழிப்புலமை வேண்டும். பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

உதவித்தொகை: கல்வி கட்டணம், போக்குவரத்து கட்டணம், வாழ்க்கை செலவினங்களுக்கான மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: www.joh.cam.ac.uk

* இந்திய ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் சொசைட்டி ஆப் இந்தியா: கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் இந்திய மாணவர்களுக்கான பிரத்யேக உதவித்தொகை!

படிப்புகள்: பிஎச்.டி., எம்.பில்., எல்.எல்.எம்., எம்.பி.ஏ., எம்.எஸ்சி., பி.சி.எல்., பொறியியல், மருத்துவம் மற்றும் ஒரு ஆண்டு கொண்ட டிப்ளமோ பட்டய படிப்புகள்.

தகுதிகள்: 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் பாடப்பிரிவுக்கு ஏற்ற துறையில் உரிய கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ஆக்ஸ்போர்டு அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி, டிப்ளமோ போன்ற ஏதேனும் ஒரு படிப்புக்கு ரூபாய் 4 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: www.oxbridgeindia.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us