தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வன ஆராய்ச்சிக்கான சிறப்பு நிறுவனம் எப்.ஆர்.ஐ.,!

வன ஆராய்ச்சிக்கான சிறப்பு நிறுவனம் எப்.ஆர்.ஐ.,!

வன ஆராய்ச்சிக்கான சிறப்பு நிறுவனம் எப்.ஆர்.ஐ.,!


நவ 07, 2016 12:00 AM

நவ 07, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 07, 2016 12:00 AM நவ 07, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வனம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு நிறுவனம் தான் எப்.ஆர்.ஐ., எனும் ‘வன ஆராய்ச்சி நிறுவனம்’!

நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை பெற்றுள்ள இந்நிறுவனம், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இயங்கிவருகிறது.

இந்நிறுவனத்தின் இயக்குனரும், வன ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தருமான சவிதா, தினமலர் கல்விமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டி இதோ:

வன ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 1906ம் ஆண்டு துவங்கப்பட்டது. வன அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்தல், வனம் குறித்த பல்வேறு ஆய்வுகளில் ஈடுபடுதல், படிப்புகள் மற்றும் பயிற்சிகளை வழங்குதல், வன பாதுகாப்பில் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தல் ஆகியவை இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கங்கள்.

ஆராய்ச்சிகள்: வேளாண்மை, சூழலியல், மரபியல், வேதியியல், பருவநிலை மாறுபாடு உட்பட 15 பிரிவுகளில் இந்நிறுவனம் உயர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. காட்டுத் தீயை முன்பே கண்டறியும் ஆராய்ச்சியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய வன ஆராய்ச்சி நிறுவனமும் இதுதான்.

பயிற்சிகள்: வனங்களை அழிக்காமல், கிராமப்புற மக்களுக்கான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தித் தரும் வகையில் பல்வேறு தொழில் பயிற்சிகளை இந்நிறுவனம் வழங்குகிறது. பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ஆண்டுதோறும் 40 தொழில் பயிற்சிகளை நடத்துகிறது. தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளை பிரகாசமாக்கும் வகையில், ‘அரோமாதெரபி’ பயிற்சி வழங்குகிறது. 

படிப்புகள்: வன ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின்கீழ், பாரஸ்ட்ரி, என்விரான்டல் மேனேஜ்மென்ட், அரோமா டெக்னாலஜி, புட் டெக்னாலஜி ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்குகிறது. இவைதவிர, பல்வேறு ஆராய்ச்சி படிப்புகளையும் வழங்கிவருகிறது. இந்தியாவில், வெகுசில பல்கலைக்கழகங்களே பாரஸ்ட்ரி படிப்புகளை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

மாணவர் சேர்க்கை: எந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் இப்பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற முடியும். ’சார்க்’ நாடுகளை சேர்ந்த மாணவர்களும் சேர்க்கை பெறலாம். எழுத்துத்தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.

எதிர்கால திட்டம்: வேலையில்லா பட்டதாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அவர்களுக்கான வேலைவாய்ப்பை பிரகாசமாக்கும் வகையில், விரைவில் திறன் மேம்பாட்டு மையம் துவக்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: இதுவரை இல்லாத அளவில், இன்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நாம் அதிகம் பேசுகிறோம்; அதிகம் கவலைப்படுகிறோம். அதுமட்டும் போதாது. வனம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை நாம் உடனடியாக மேற்கொள்ளவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கு முதலில், அனைத்துதரப்பினரும் விழிப்புணர்வு பெறவேண்டும். இதற்கு அடித்தளமாக, அனைத்து பள்ளி பாடத்திட்டங்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us