தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/போக்குவரத்து வடிவமைப்பு

போக்குவரத்து வடிவமைப்பு

போக்குவரத்து வடிவமைப்பு


ஏப் 07, 2017 12:00 AM

ஏப் 07, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 07, 2017 12:00 AM ஏப் 07, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பங்கு, இன்றியமையாததாக மாறி வருகிறது! இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் போக்குவரத்து துறை என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

மிதிவண்டி தொடங்கி நான்கு சக்கர வாகனங்கள், கப்பல், விமானங்கள், மினி லாரிகள், டிரக்குகள், பேருந்துகள், ரயில்கள் என அனைத்து போக்குவரத்து ஊர்திகளின் தொழில்நுட்ப வடிவமைப்பை களஆய்வு முறையில் படிப்பதே இத்துறை படிப்பின் சிறப்பம்சம். இதில், டிரான்ஸ்போடேஷன் டிசைன் மற்றும் ஆட்டோமொபைல் டிசைன் ஆகிய இரண்டுமே சிறப்பு வாய்ந்த துறைகள் என்றே எண்ணலாம்.

பெறும் திறன்கள்
வடிவமைப்பு செயல்முறை, வடிவங்களின் உருவம் மற்றும் அளவு, வளைவுகள் மற்றும் அதன் தன்மை நிலைகள், ஒழுங்கமைவு, 3டி மாடலிங், தொழில்நுட்பங்கள் மற்றும் காற்றியக்கவியல் உள்ளிட்டவற்றை முன்று அல்லது நான்கு ஆண்டுகள் கொண்ட போக்குவரத்து வடிவமைப்பு படிப்பில் கற்றுக் கொள்ளலாம்.

எங்கு படிக்கலாம்?
போக்குவரத்து வடிவமைப்பு மற்றும் ஆட்டோமொபல் படிப்பானது, புராடக்ட் டிசைன் அல்லது இன்டர்ஸ்டியல் டிசைன் பாடத்திட்டத்துடன் உள்ளடங்கியுள்ளது. எனினும், ஒரு சில கல்வி நிறுவனங்கள் தனியாக இப்படிப்பை வழங்குகின்றன.

டி.ஒய்.பி.டி.சி., சென்டர் பார் ஆட்டோமோட்டிவ் ரீசர்ச் அண்ட் ஸ்டடீஸ், புனே மூன்று ஆண்டுகள் கொண்ட இளநிலை படிப்பில் பி.டிசைன்., பட்டப்படிப்பை வழங்கிவருகிறது. இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் (எம்.ஐ.டி.,)- புனே 4 ஆண்டுகள் கொண்ட இன்டஸ்டிரியல் டிசைன் படிப்பை வழங்குகிறது. இளநிலை டிசைன் பட்டப்படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வில் (யு.சி.இ.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.ஐ.டி.,-மும்பை, ஐ.ஐ.டி.,-குவஹாத்தி மற்றும் ஐ.ஐ.டி.டி.எம்.,- ஜபல்பூர், போன்ற கல்வி நிறுவனங்களில் பி.டிசைன்., படிக்கத் தகுதி பெறுவர்.

உயர்கல்வி எவ்வாறு?
பல்வேறு தொழில்நுட்பங்கள் உதவியுடன் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்று என்பதால், இத்துறையில் உயர் கல்வியை மேற்கொள்வதன் மூலம் மேலும் திறனறிவை உயர்த்தி கொள்ள முடியும். ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்கள் 2 ஆண்டுகள் கொண்ட மாஸ்டர் ஆப் டிசைன் மற்றும் போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ படிப்புகளை வழங்குகின்றன.

வேலை வாய்ப்புகள்
அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பெரும் அளவில் வாய்ப்புகள் கொட்டிகிடக்கின்றன. மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹோண்டா கார்ஸ் இந்தியா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட், ராயல் என்பீல்ட் மற்றும் டி.வி.எஸ்., உள்ளிட முன்னணி நிறுவனங்கள் பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றன.

வருமானம்
பயிற்சி மற்றும் ஆரம்ப காலத்தில் ஆண்டுக்கு ரூபாய் 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். தகுதிகள் மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஆண்டுக்கு ரூபாய் 15 லட்சம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பை எளிதில் பெற முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us