தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நிலையான வெற்றிக்கு ஒரே வழிதான்!

நிலையான வெற்றிக்கு ஒரே வழிதான்!

நிலையான வெற்றிக்கு ஒரே வழிதான்!


ஏப் 11, 2017 12:00 AM

ஏப் 11, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 11, 2017 12:00 AM ஏப் 11, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

‘எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், வாழ்வில் முன்னுக்குவர இயலவில்லையே’ என்று ஆதங்கம் கொண்டு, குறுக்கு வழியில் பயணிக்க நினைப்பவர்களை இன்று அதிகம் பார்க்க முடிகிறது!

குறுக்குவழியில் பெற நினைக்கும் வெற்றி எப்போதும் நிலைப்பதில்லை. எவ்வளவு தான் தகுதிப்படைத்தவராக இருந்தாலும், தேர்ந்தெடுக்கும் பாதை தவறானதாக இருக்கும் பட்சத்தில், அது நம்மை தகுதியின்மை செய்துவிடும். கேடு நினைவு நமது வாழ்வில் நிரந்தர தோல்வியை உண்டாக்கிவிடும்.

நிலையான வெற்றிக்கு நேர்வழியைத் தேர்ந்தெடுப்பதுதான் ஒரே வழி! நேர்வழியில் செல்வதற்கு மனதில் இருக்கும் குறுக்கு நினைவுகளை அகற்ற வேண்டும். ‘அமிலம், அது இருக்கும் பாத்திரத்தையே அழித்து விடும்’! மனதில் நிறைந்திருக்கும் தீய எண்ணங்கள், வாழ்க்கையை தீய வழியில் கொண்டு சென்று நம்மையே அழித்துவிடும்!

தீங்கு எண்ணங்கள் சரியான பாதைக்கு, நம்மை வழிநடத்த வாய்ப்பே இல்லை! ஆர்வத்துடனும், நேர்மறையான எண்ணங்களுடனும் ஒரு செயலை ஆரம்பித்தப்பின் தான் அறிவோம், வெற்றியின் எல்லைக்கோடு வெகுதூரத்தில் இல்லை என்பதை...

அதேசமயம், எல்லைக்கோட்டிற்கு அருகில் செய்யும் தவறுகூட, வெற்றி வாய்ப்பை பறித்துவிடும் என்பதால், மனதை நல்லெண்ணங்களால் நிரப்புவது அவசியம். அந்த நல்லெண்ணம் நம்மிடத்தில் சரியான புரிதலை ஏற்படுத்தும். ஒருவன் தன்னை முழுவதும் புரிந்தவனாக, தன் மனதை அடக்கி ஆள்பவனாக, தன் மீது முழுக்கட்டுப்பாடு உள்ளவனாக மாறும் போது, வெற்றி என்பது எளிதில் வசப்படும்!

ஒன்றை குறிக்கோளாகக்கொண்டு செயல்படும்போது, தேவையான சரியான அணுகுமுறையை கையாளவேண்டும் என்பதற்கும், அதை தவிர்த்து குறுக்குவழியை நாடுவது, ஒட்டுமொத்த வெற்றியையும் பறித்துவிடும் என்பதற்கும், துரியோதனின் செயல்பாடு சிறந்த உதாரணம்.

துரியோதனின் தீமை, அவனோடு சேர்ந்த அவனுடைய 99 சகோதரர்களையும், சில நூறு குறுநில மன்னர்களையும், பல்லாயிரக்கணக்கான படை வீரர்களையும், நட்புக்கு இலக்கணமான மாவீரன் கர்ணனையும் அழித்தது, என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சரியாக சொல்லப்போனால் அவனுடைய ஆசிரியர் துரோணரையும், பிதாமகர் பீஸ்மரையும் சேர்த்தே அழித்தது என்பதே இதிகாசம் கூறும் உண்மை.

“மறந்தும் பிறன்கேடு சூழற்க” என்கின்றார் வள்ளுவர். மறந்தும் கூட மற்றவருக்கு கேடு நினைக்க கூடாது. கோடிகளில் ஒருவராக திகழ வேண்டும் என்றால் கேடு நினைவு வேண்டாம். நிலையான வெற்றிக்கு தேவை நேர்வழியே!

-க.சரவணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us