தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நிகழட்டும் கல்வியில் ஒரு ரசாயன மாற்றம்!

நிகழட்டும் கல்வியில் ஒரு ரசாயன மாற்றம்!

நிகழட்டும் கல்வியில் ஒரு ரசாயன மாற்றம்!


ஏப் 25, 2017 12:00 AM

ஏப் 25, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 25, 2017 12:00 AM ஏப் 25, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அறிவுசார்ந்த பரிமாற்றங்கள் நிகழுமிடம் வகுப்பறை! ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையே, வகுப்பறையில் நடக்கும் இந்த அறிவு பரிமாற்றத்தில் மாணவர்கள் முன்னிறுத்தப்பட்டாலும், ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது!

ஆசிரியர்கள், அவர்கள் சார்ந்த துறையில் ’அப்டேட்’ செய்து கொள்வதோடு, உலகில் நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப கற்பிப்பதும் அவசியம். இந்த கல்வி பரிமாற்றத்தில், கருத்துக்களை ஊன்றி பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மட்டுமே, மாணவர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கின்றனர். சுவாரஸ்யமாக, அறிவுப்பூர்வமாக மாணவர்களை சிந்திக்கத்துõண்டும் வகையில் வகுப்பறை இருக்க வேண்டும். கல்வி, ஆர்வத்தை தூண்டும் வகையில் அமையும் பட்சத்தில், மாணவர்களது திறமை தானாக வெளிப்படும்.

இப்பொழுதெல்லாம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எளிதான வேலையாக ’கல்வி’ அமைந்துவிட்டது, வருத்தத்திற்குரியது. ’இதை மட்டும் படியுங்கள்’ என முக்கிய வினா, விடை அடங்கிய 25 பக்க நோட்ஸ் ஒன்றை மாணவர்களின் கையில் கொடுத்து விடுகின்றனர். மாணவர்களும், அவற்றை மட்டுமே தயார் செய்து, தேர்வு எழுதி, மதிப்பெண் பெற்றுக் கொள்கின்றனர். இன்று, அறிவுத்தேடுதலுக்கான வாய்ப்புகள் பல இருந்தாலும், அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள பல தடைகள் உள்ளன. பல புத்தகங்களை தேடி, அதில் உள்ள கருத்துக்களை கோர்வையாக்கி, கேள்விக்கு விடையாக்கும் முறை, இன்று வெகுவாக குறைந்துவிட்டது!

மாணவ, மாணவியரை நன்கு படிக்க வைக்க ஆசிரியர்களுக்கு உதவி செய்வது, பெற்றோர்களின் கடமை. ஒரு மாணவன் தவறு செய்தாலும், அந்த மாணவனைக் கண்டிக்கும் ஆசிரியர்களைத் தான் விசாரிக்கின்றனர். பல சமயங்களில், பெற்றோர்களும் கூட தங்களது பிள்ளையின் தவறை திருத்தாமல், ஆசிரியர் மீது புகார் தெரிவித்து, அவர்களின் கண்டிப்பு தன்மையை மாற்றி விரக்தி நிலைக்கு தள்ளி விடுகின்றனர்.

மாணவர்கள், ஆய்வகங்களிலும், கல்விக் கூடத்திலும் செலவிடும் நேரத்தை காட்டிலும், அதிகம் வீட்டிலும், வெளியிலும் தான் செலவிடுகின்றனர். மாணவப் பருவத்தில் படிப்பு மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும். கல்லுõரிகளில் சற்று அதிக நேரத்தை மாணவர்கள் செலவிட்டால், பெற்றோர்களின் கேள்விகளுக்கு ஆளாகிவிடுகின்றனர். மாணவர்களுக்கும், நேரத்தை செலவிடும் சுதந்திரம் பரிபோய் விடுகிறது. இதில், மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே, நம்மால் கல்வியில் வேகமாக முன்னேற முடியும்.

’எதையாவது கண்டுபிடிக்க வேண்டும்’ என்ற ஆர்வமும், அதற்கான முயற்சியும் மாணவர்களிடம் இருக்க வேண்டும். ஒரு கல்லூரி தரமான மாணவர்களை உருவாக்கும்பட்சத்தில், அக்கல்லுõரியை நோக்கி, தொழில் நிறுவனங்கள் நிச்சயம் படையெடுக்கும். தரமான கற்பித்தலுக்கு சிரத்தையெடுக்கும் கல்லூரியால் தான், அனைத்து நிலைகளிலும் தரமான மாணவர்களை உருவாக்க முடியும். ஆசிரியர்களிடம் கற்பிக்கும் ஆர்வத்தையும், மாணவர்களிடம் கற்கும் ஆர்வத்தையும் துõண்டும் சூழலை உருவாக்கினால், எதிர்காலம் சிறப்பாக அமையும். எதிர்பாராத வெற்றிகளை கல்லூரிகள் எட்டும் என்பதில் ஐயமில்லை.

வெளிநாட்டு கல்வியின் தரத்துக்கு நிகரான கல்வியை வழங்கும் சூழலை, வெகுசில கல்லுõரிகளே உருவாக்குகின்றன. வெளிநாடுகளுக்கு மாணவர்களை அனுப்பி, அங்குள்ள கல்வித் திட்டங்களை அறிந்து, தங்களின் அறிவை உயர்த்திக் கொள்ள, கல்வி நிறுவனங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். இதற்கான செலவுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டு பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருதரப்பு கல்வி பரிமாற்றங்களை நிகழச் செய்வதும் கல்வி நிறுவனங்களின் கடமை.

வகுப்பறை முதல் வெளிநாட்டு பல்கலைக்கழக கல்வி பரிமாற்றம் வரை ஒரு ரசாயன மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே சிறப்பான, திறமையான பட்டதாரிகளை உருவாக்க முடியும். தொழிற்கல்வி நிறுவனங்களாலும், மென்மேலும் உயர முடியும். இவ்வாறு, எங்களது கல்வி நிறுவனத்தில், கல்விமுறைகளில் மட்டுமின்றி பல்வேறு நடவடிக்கைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்திவருகிறோம்! 

-பொம்மன்ன ராஜா, முதல்வர், கே.பி.ஆர். தொழில்நுட்ப கல்லூரி, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us