தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தன்னாட்சி பெற்ற கல்லுõரிகளை தேர்வு செய்யுங்கள்!

தன்னாட்சி பெற்ற கல்லுõரிகளை தேர்வு செய்யுங்கள்!

தன்னாட்சி பெற்ற கல்லுõரிகளை தேர்வு செய்யுங்கள்!


ஏப் 27, 2017 12:00 AM

ஏப் 27, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 27, 2017 12:00 AM ஏப் 27, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்களது குழந்தைகள், இன்ஜினியராகவோ, டாக்டராகவோ வர வேண்டும் என்பதில் தான் பெற்றோர்கள், பலரும் அக்கறை காட்டுகின்றனர். அதனால், இன்று மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும் மாணவ, மாணவியர் பலர், அவர்களது பெற்றோர்களின் விருப்பத்துக்காகவே அப்படிப்பை தேர்வு செய்துள்ளனர்!

ஆனால், மாணவ, மாணவிகளின் விருப்பம் வேறாக உள்ளதையும் அறிய முடிகிறது. விருப்பத்திற்கு மாறான படிப்பை தேர்வு செய்வதால், அவர்களின் பல திறமைகள் வெளிவராமலேயே மறைந்து கிடக்கின்றன. பேஷன் டிசைனிங், மக்கள் தொடர்பு, விஷுவல் மீடியா, அடிப்படை அறிவியல் போன்ற துறைகளை இன்று பலர் விரும்புகின்றனர். இன்ஜினியரிங் படித்து முடித்தாலும் கூட, வேலைக்கு செல்லும்போது இதுபோன்ற துறைகளில் பணியாற்ற விரும்புகின்றனர். அப்போது, அவர்களுடைய இன்ஜினியரிங் படிப்பு என்பது வீணாகி விடுகிறது. எனவே, மாணவர்கள் விரும்பும் துறையில் கல்வி கற்க, பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.

பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரே துறையில் பல ஆயிரம் மாணவர்கள் படிப்பதால்தான் இன்ஜினியரிங் முடித்த பின்னரும், தகுதியான வேலையின்றி பலர் உள்ளனர். மாணவர்கள், விரும்பும் துறையை தேர்வு செய்து, அதில் திறமையை வளர்த்துக் கொண்டால், விரைவாக முன்னேற்றம் காண முடியும்.

தொழில் துறைக்கும், கல்வித்துறைக்கும் இடையே இன்னும் இடைவெளி அதிகமாகவே இருக்கிறது. படிக்கும்போதே, தொழிற்சாலைகளில் பயிற்சி பெறும் வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே சிறந்த இன்ஜினியராக முடியும். அனுபவக் கல்வி என்பது அவசியமாகிறது. இத்தகைய வாய்ப்புகளை சில இன்ஜினியரிங் கல்லுõரிகள் மட்டுமே வழங்குகின்றன. அதோடு, இந்திய கல்வி நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள இன்ஜினியரிங் கல்வி முறைகளையும் அறிந்தால் மட்டுமே, சர்வதேச அளவில் உயர முடியும்.

கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி பெற்றவையாக இருந்தால்தான், காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைக்க முடியும். இத்தகைய பாடத்த்திட்டங்களையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்த வெளிநாட்டு பல்கலையுடன் ஒப்பந்தங்கள் இருப்பது நலம். பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவும், தற்கால தொழில்நுட்ப மாற்றங்களை எளிதாக கற்கவும் இவை அவசியம். எனவே, மாணவர்கள் தன்னாட்சி பெற்ற கல்லுõரிகளை தேர்வு செய்வது சிறந்தது.

வசதியற்ற பலருக்கும் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அவர்கள், பத்தாம் வகுப்பு முடித்தவுடன், பாலிடெக்னிக்குகளில், இன்ஜினியரிங் டிப்ளமோ முடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. டிப்ளமோ முடித்தவுடன் வேலைக்கு செல்லலாம். ’லேட்ரல் என்ட்ரி’ முறையில் இன்ஜினியரிங் படிப்பதும் எளிது.

தன்னாட்சியுடன் தொடர்ச்சியான கல்வி மேம்பாடு, வெளிநாட்டு பல்கலைகளுடன் ஒப்பந்தம், தொழில்துறையில் பயிற்சி என பல்வேறு கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் எங்களது கல்வி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது!  

-ஆர்.விஜயக்குமார், நிர்வாக அறங்காவலர், எஸ்.என்.ஆர்., அறக்கட்டளை, கோவை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us