தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நம்மை உருவாக்குவது நம் மனமே!

நம்மை உருவாக்குவது நம் மனமே!

நம்மை உருவாக்குவது நம் மனமே!


ஏப் 28, 2017 12:00 AM

ஏப் 28, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 28, 2017 12:00 AM ஏப் 28, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம் ஒவ்வொருவரிடமும் வெளி மனம், ஆழ் மனம் என இரண்டு உள்ளது. நாம் எதை எதைப் பார்த்து ஆசைப் படுகிறோமோ, அத்தனையும் நமது வெளி மனசில் குவித்து வைக்கப்படுகிறது!

நம் ஆழ்மனம், நமது வெளி மனதில் சேர்த்து வைத்திருக்கும் ஆசைகளை எல்லாம் செயல்படுத்த திட்டமிட்டு, நம்மை அறியாமலேயே அவைகளை செயல்படுத்த நம்மைத் தூண்டும். ‘அத்தனைக்கும் ஆசைப் படு’- என்று சொல்வார்கள்! ஆனால் அத்தனை ஆசைகளும், நம் வாழ்க்கையில் முன்னேற உதவக் கூடிய ஆசைகளாக இருக்க வேண்டும். நல்ல, நல்ல அர்த்தமுள்ள  குறிக்கோள்களாக இருக்க வேண்டும்!

வேண்டாத இச்சைகளுக்கு ஆசைப் படக்கூடாது. வேண்டாத குப்பைகளுக்கு ஆசைப்பட்டு வெளி மனசில் சேர்த்து வைத்தால், நம் ஆழ்மனம் சும்மா இருக்காது! வெளி மனசில் குவிந்து கிடக்கும் அந்த வேண்டாத ஆசைகளை எப்படி நிறை வேற்றலாம் என்று யோசித்து அதை செயல்படுத்தும் பாதைக்கு உங்களை இழுத்து சென்று விடும்.

ஆம், நம் சிந்தனையில் எவை எல்லாம் குவிகிறதோ, அவைகள் தான் நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்யப் போகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! நமது ஆழ் மனம் இரவில் கூட சும்மா இருக்காது. நாம் ஆசைப் படுவதை எப்படியாவது, எந்த வழியிலாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கும். நம்மையறியாமலேயே அதை செயல்படுத்தும் வேலையில் ஈடுபடும். 

ஆகவே,

* குறிக்கோளை நிர்ணயம் செய்து கொள்வது தான் நமது முதல் வேலை. “குறிக்கோள்’ இல்லாத மனம் தரையில் கொட்டிய பால் போல், உபயோகம் இல்லாமல் போய் விடும்.

* அடுத்து சிந்தனை அனைத்தும் நேர்மறை சிந்தனைகளாகவே இருக்கவேண்டும்! அவைகள் தான் நம் வாழ்க்கையில் வெற்றியை ஈட்டித் தருபவைகள்!

* மனதில் அவநம்பிக்கை தரும்படி பேசுபவர்களை அருகில் சேர்க்காமல், மனதிற்கு நம்பிக்கை ஊட்டும்படி பேசுபவர்களையே நட்பாக வைத்திருப்பது நல்லது!

மனது எதை நம்புகிறதோ அதை நோக்கித்தான் நம் செயலும் இருக்கும்! நம் செயல்களைப் பொறுத்துத் தான் நம் வெற்றியும் இருக்கிறது! நம் மனதின் சக்தியை புரிந்து செயல்பட்டால் வெற்றி தானாக வந்து சேரும்!

-துடுப்பதி ரகுநாதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us