தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/’பன்முகத் திறன் வளர்ப்பிற்கு முக்கியத்துவம்’!

’பன்முகத் திறன் வளர்ப்பிற்கு முக்கியத்துவம்’!

’பன்முகத் திறன் வளர்ப்பிற்கு முக்கியத்துவம்’!


மே 05, 2017 12:00 AM

மே 05, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 05, 2017 12:00 AM மே 05, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேவை மனப்பான்மையுடன் துவங்கப்பட்ட எங்கள் கல்வி நிறுவனங்களில், மாணவர்களின் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, உத்வேகப்படுத்தப்படுகின்றனர்! மாணவர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கல்வி மற்றும் திறன் சார்ந்த குறைகள் கண்டறியப்பட்டு, உரிய பயிற்சிகளின் மூலம் அவை நிவர்த்திசெய்யப்படுகின்றன!

கல்லூரியை முடிக்கும்போது கைநிறைய சம்பளத்தை உறுதிசெய்யும் கல்வி நிறுவனங்களுக்கே பெற்றோர் முக்கியத்துவம் அளிக்கின்றனர். எனவே, வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் வகையில் தொழில் சார்ந்த பாடத்திட்டங்கள், சூழலுக்கேற்ப அறிமுகம் செய்யப்படுகின்றன.

வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் விதமாக இரண்டாமாண்டு முதலே தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு நிறுவனத்தில் பணிபுரியத் தேவையான தகுதியையும், தனித்திறமையையும் வளர்க்கும் ‘பிரத்யேக வேலைவாய்ப்பு பயிற்சி’, சிறந்த வல்லுனர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் பணிபுரியும் எங்கள் முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்களுக்கு நேரில் வந்து செயல்வழிக் கற்றல் பயிற்சி அளிக்கின்றனர். இதன் மூலம், முன்னாள் மாணவர்களுடன் இணக்கம் அதிகரிப்பதுடன், பணி நிமித்தம் சார்ந்த நெருக்கமும் ஏற்படுகிறது!

மாணவர்கள் எளிய வழியில் கற்க ஏதுவாக ‘டிஜிட்டல்’ வகுப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தவிர, ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலமும் கல்வி கற்பிக்கப்படுகிறது. நவீன காலகட்டத்திற்கேற்ப, ஆசிரியர்கள் தங்களை மெருகேற்றிக்கொள்ளும் வகையில், ஒவ்வொரு பருவத்திலும் கல்வி நிபுணர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பலதரப்பட்ட மாணவர்கள் பயிலும் எங்கள் கல்வி நிறுவனத்தில், முதலாமாண்டு மாணவர்களில் குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

பொருளாதாரம் ஓர் தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்பதற்காக, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இலவசக் கல்வியும் வழங்கப்படுகிறது. அறிவு சார்ந்து மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் சார்ந்த விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மேலும், எங்கள் சொந்த செலவிலேயே மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு மாணவர்களை ‘இன்டஸ்ட்ரியல் விசிட்’ அனுப்பி வேலைவாய்ப்பை உறுதிசெய்து வருகிறோம். செயல்முறை அறிவுடன் மாணவர் வெளியேற வேண்டும் என்பதே எங்கள் கல்வி நிறுவனங்களின் நோக்கம்! இவையே எங்களது வெற்றிக்கான காரணம்!

– சரஸ்வதி கண்ணையன், செயலாளர், இந்துஸ்தான் கல்விக்குழுமம், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us