தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சுற்றுச்சூழலை சீரமைப்பதில் ஆர்வமா?

சுற்றுச்சூழலை சீரமைப்பதில் ஆர்வமா?

சுற்றுச்சூழலை சீரமைப்பதில் ஆர்வமா?


மே 06, 2017 12:00 AM

மே 06, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 06, 2017 12:00 AM மே 06, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நவீன வளர்ச்சியால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலை சீரமைக்கும் பணியில் நீங்கள் ஆர்வம் கொண்டவர் என்றால், உங்களுக்கான சிறந்த தேர்வு சுகாதாரத் துறை!

முக்கியத்துவம்
இந்தியா, சீனா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில், சுகாதாரம் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. தூய்மையற்ற குடிநீர், மனித கழிவுகள், பயன்படுத்தப்பட்ட மின் உதிரிபாகங்கள், அழுகிய காய்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்ட கழிவு பொருள்களை முறையாக அகற்றப்படாத காரணங்களால் சுகாதாரம் பெரிதும் மாசுபடுகின்றது. இதன், விளைவு எண்ணற்ற நோய் தொற்றுகளால் அவதிப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

விளைநிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல்களை பாதுகாக்க, முறையான நிலத்தடி வடிகால் அமைப்புகளை வடிவமைப்பதினாலும், கழிவுகளை பிரித்து அதை மக்க செய்தல், தொழில்நுட்ப யுத்திகளை பயன்படுத்துதல், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற களத்தில் இருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பை, இத்துறை சார்ந்த படிப்பு வழங்குகிறது.

படிப்புகள்
நீர், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல், கழிவு மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் முதுநிலை பட்டய படிப்பு, குறுகிய கால படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. முதுநிலை பட்டய படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்புகள்
அரசு சுகாதார துறை, தனியார் தன்னார்வ சேவை நிறுவனங்கள், ஆசிரியர் மற்றும் பேராசிரியர், சமூக ஆர்வலர், தனியார் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், வடிகால் வாரியங்கள் உள்ளிட்ட துறைகளில் இளநிலை, முதுநிலை மற்றும் பட்டய படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் நிறைந்துள்ளன.

உதவித்தொகைகள்
சுகாதாரம், சுற்றுச்சூழல், நீர் மற்றும் ஆரோக்கியம் சாந்த படிப்புகளுக்கு, ரோட்டரி அறக்கட்டளை உதவித்தொகை, சர்வதேச நீர் மையம் உதவித்தொகை (ஆஸ்திரேலியா), ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவன உதவித்தொகை மற்றும் ஸ்வீடிஷ் சர்வதேச மேம்பாடு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கல்வி நிதி உதவிகளை பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் பல சர்வதேச தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

முக்கிய கல்வி நிறுவனங்கள்
டாடா சமூக அறிவியல் நிறுவனம்
டபல்யூ.ஏ.எஸ்.எச்., கல்வி நிறுவனம்
அகில இந்திய சுகாதாரம் மற்றும் பொது சுகாதார கல்வி நிறுவனம்
டெரி பல்கலைக்கழகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us