தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/‘வணிகத்திற்கானது அல்ல கல்வி நிறுவனங்கள்’

‘வணிகத்திற்கானது அல்ல கல்வி நிறுவனங்கள்’

‘வணிகத்திற்கானது அல்ல கல்வி நிறுவனங்கள்’


மே 18, 2017 12:00 AM

மே 18, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 18, 2017 12:00 AM மே 18, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

‘சமுதாய முன்னேற்றத்திற்காக கல்வி சேவையை செய்ய வேண்டுமே தவிர, வணிக நோக்கத்திற்காக கல்வி நிறுவனங்களை நடத்த கூடாது’ என்பது எனது கருத்து!

அதே குறிக்கோளுடனும், கற்பிப்பதில் எனக்குள்ள ஆர்வத்தினாலும், முதன்முதலில் மாணவ, மாணவிகளுக்கு டியூசன் எடுத்தேன். அதில், ஆர்வம் அதிகமாக, அதிகமாக பள்ளிகளை ஆரம்பித்தேன். பிறகு, சமுதாயத்தில் பின்தங்கிய மற்றும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு பொறியியல் கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் பொறியியல் கல்லூரியை துவங்கினேன்!

ஆனால், இன்றைய காலகட்டத்தில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில், 70 சதவீத மாணவர்கள் கூட தேர்ச்சி பெறுவதில்லை. எவ்வளவு முயற்சி செய்தும், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இயலாத சூழல் நிலவுகிறது.

இதே நிலை எங்களது கல்லூரிக்கும் இருந்தது. மாணவர்கள் ஏன் குறைவான மதிப்பெண் பெறுகிறார்கள்? என்ற கேள்விக்கு பதில் காண ஒவ்வொரு மாணவராக நேரில் சந்திந்து, கலந்துரையாடினேன். முதலாமாண்டில் இருந்தே மாணவர்களிடம் கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும் என்பதையும் புரிந்துகொண்டேன்!

எனது அனுபவத்தில், இதற்கு ஒரு சரியான முறையை கண்டறிந்து, அதை நடைமுறைப்படுத்தினேன். அதற்கு பலன் கிடைப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. எனது புதிய முறையால், 85 சதவீத மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இனி வரும் காலங்களிலும் 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெறுவர் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாகி உள்ளது.

மாணவர்களிடம், கல்லூரி நிர்வாகம் நேரடியாக கலந்துரையாடி, மாணவர்களின் உண்மையான தேவையை புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்பட்டால், நிச்சயம் 100 சதவீத தேர்ச்சியைக்கூட எட்ட முடியும். இது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சாத்தியம்!

கல்வியிலும், விளையாட்டுகளிலும், ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிப்பதிலும் சிறந்த மாணவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கும் விழாவை சமீபத்தில் நடத்தினோம். அந்த மாபெரும் விழாவில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மட்டுமின்றி, பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் போட்டிகளில் பங்கேற்று முக்கிய இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், எங்களது டெக்னாலஜி ரிசோர்ஸ் இன்குபேஷன் சென்டரை (டி.ஆர்.ஐ.சி.,) சிறந்த முறையில் பயன்படுத்தி, சாதித்த மாணவர்களுக்கும் விருது வழங்கி கவுரவித்துள்ளோம்!

எந்த காலத்திலும், பொறியாளர்கள் நாட்டிற்கு தேவை. பொறியாளர்கள் இன்றி நாட்டின் முன்னேற்றம் இல்லை. எனவே, மாணவர்களை மதிப்பெண் எடுக்க மட்டும் ஊக்கம் அளிக்காமல், தேவையான திறன்களை அளிக்கவும் கல்வி நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும். பெற்றோர், மாணவர், கல்லூரி நிர்வாகத்தினர் மூவரும் இணைந்து செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும்!

அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும், பல திறமைகளை பெற்றிருந்தாலும், ஒழுக்கம் இல்லாவிட்டல், யாராலும் வாழ்வில் வெற்றி பெற முடியாது. அதனால், சமுதாயத்திற்கும் நன்மை இல்லை. எனவே, ஒழுக்கத்திற்கும், கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்!

-அல்ஹஜ் கே. மூஷா, தலைவர், தானிஷ் அகமது பொறியியல் கல்லூரி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us