மே 30, 2017 12:00 AM
மே 30, 2017 12:00 AM
தென் மாநிலங்களில் கல்வியின் தரம் மிகவும் சிறப்பாக உள்ளது. அங்குள்ள பல கல்வி நிறுவனங்கள் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. அதேசமயம், அவை சிறந்த கல்வியை வழங்குவதில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டுகின்றன என்பது எனது கருத்து!
துறை சார்ந்த பாடங்களை கற்பிப்பதைத் தாண்டி, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை மாணவர்களிடத்தில் மேம்படுத்துவதும் அவசியமாகிறது! ஆய்வகங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியமானவை தான். அவற்றைவிட, ஆசிரியர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவற்றை உணர்ந்துதான், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ள எங்கள் பல்கலைக்கழகம், மிகச் சிறந்த ஆசிரியர்களையும் தேர்வுசெய்து, அங்கீகரிக்கிறோம்.
600 ஏக்கர் பரப்பளவில், 30 ஆயிரம் முழுநேர மாணவர்கள் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள். அவர்களில், 50 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், தென் மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் அடங்குவர். தொழில் நிறுவனங்களுடன் சிறந்த உறவை பேணுவதால், படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு உலகின் தலைச்சிறந்த நிறுவனங்களில் வேலையை பெற்றுத்தர முடிகிறது.
90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற 600 மாணவர்கள், ஒவ்வொரு ஆண்டும் எல்.பி.யு.,வில் சேர்க்கை பெறுகின்றனர். கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே எந்த படிப்பிற்கும் நன்கொடை பெறப்படுவதில்லை. மேலாண்மை இடங்கள் என்று எதுவும் கிடையாது. முழு வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கிறோம்! ஒரு கல்வி நிறுவனத்திற்கு இவை மிக முக்கியமான பண்புகள்!
வரும் 2025க்குள் உலகின் சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக வரவேண்டும் என்பதை குறிக்கோளாகக்கொண்டு, ஐ.ஐ.டி.,களை விடவும் மிகவும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துகிறோம்! கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், 200க்கும் அதிகமான வெளிநாட்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம். பட்டம் பெற்று வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் இருந்தே திறம்பட பணியாற்றும் அளவில், மாணவர்களை தயார்படுத்துகிறோம்.
நேர்முகத்தேர்வில் எப்படி பங்கேற்க வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எவ்வாறு பேச வேண்டும் ஆகியவை உட்பட மென்திறன் மற்றும் ஆளுமைத்திறன் மேம்பாடு என இன்றைய இளைஞர்களுக்கு தேவையான அனைத்து திறன்களையும் மேம்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். பாதுகாப்பும், ஒழுக்கமும் ஒருங்கே இடம்பெற்றுள்ளதால், ஆயிரம் மைல்களைத் தாண்டியும் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு, தங்களது குழந்தைகளை பெற்றோர் நம்பி அனுப்பிவைக்கின்றனர்.
பொறியியல், கட்டடக்கலை, பேஷன், ஹோட்டல் மேலாண்மை, சட்டம், பார்மசி உட்பட ஏராளாமான துறைகளில், 200க்கும் அதிகமான படிப்புகளை வழங்குகிறோம். மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகள் மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. எனினும், வரும் காலத்தில் அந்த படிப்புகளையும் வழங்க திட்டமிட்டுள்ளோம். சமீபத்தில் நடந்த 8வது பட்டமளிப்பு விழாவில், 16 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெற்றனர். 38 மாணவர்கள் தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர். இந்தியாவில், வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் காணமுடியாத பன்முகத்தன்மையை எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம்!
-அமன் மிட்டல், இணை இயக்குனர், லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம், பஞ்சாப்.
