தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அமெரிக்காவில் உயர்கல்வியா?

அமெரிக்காவில் உயர்கல்வியா?

அமெரிக்காவில் உயர்கல்வியா?


ஜூன் 05, 2017 12:00 AM

ஜூன் 05, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 05, 2017 12:00 AM ஜூன் 05, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அமெரிக்காவிலுள்ள அங்கீகாரம் பெற்ற 4500-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிலையங்களில் படிப்பதற்கான சேர்க்கைக் கடிதம் பெற்ற இந்திய மாணவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளியேறியவர்கள் உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் முன்னணியில் திகழ்கிறார்கள்!

துடிப்பும், வெளிப்படைத்தன்மையும் தரமும் இணைந்த முற்றிலும் புதிய வாழ்வுக்கு தயார் படுத்தும் இளைய பட்டாளத்துடன் சேரும் வாய்ப்பைப் பெற்றமைக்கு நீங்கள் பெருமிதம் கொள்ளலாம். அமெரிக்காவில் படித்த பலர் இந்தியாவில் தலைசிறந்த அரசியல்வாதிகளாக, தொழிலதிபர்களாக, கலைஞர்களாக, கல்வியாளர்கள் மற்றும் அறிவியலாளர்களாகத் திகழ்கிறார்கள். அந்த வரிசையில் நீங்களும் சேரப் போகிறீர்கள்.

தற்போதைய நிலவரப்படி, சுமார் 1,66,000 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முந்தைய எண்ணிக்கை 1 லட்சம். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மாணவர் மற்றும் பல்கலைக்கழகக் கூட்டுறவை பலப்படுத்துவது, இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உயர் முன்னுரிமைகளில் ஒன்றாகும். இந்நோக்கில், இந்த ஆண்டு அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள் குழுவை வரவேற்கக் காத்திருக்கிறோம்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை என்பது, மாணவர்கள் மிகுந்த கவனத்துடனும் கடின உழைப்புடனும் மேற்கொள்ளும் செயலாகும். அதேபோல், விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதிலும் பல்கலைக்கழகங்கள் தீவிரக் கவனத்துடன் செயலாற்றுகின்றன. மாணவர்களுக்குப் பக்கபலமாக அவர்களின் குடும்பத்தினரும் முக்கியப் பங்காற்றுகிறார்கள். ஒரு மாணவரின் முதல் அல்லது இரண்டாவது தெரிவாகக்கூட இல்லாத கல்லூரி, பிற்பாடு அவருக்கு மிகப் பொருத்தமானதாக அமைந்துவிட வாய்ப்புண்டு. அடிக்கடி நான் சொல்வது போல, “சில வேளைகளில், நாம் எதை விரும்ப வேண்டும் என்று நமக்கே தெரிவதில்லை.”

அமெரிக்காவிலுள்ள உயர்கல்வி நிலையங்களில் தற்போது பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்திய மற்றும் உலகெங்கிலுமுள்ள பிற மாணவர்களுக்கு அமெரிக்காவே முதல் தெரிவாகத் திகழ்கிறது. உயர்கல்வியில் அமெரிக்காவின் நிகரற்றத் தரத்திற்கு இதுவே சான்று.

மேலும், துடிப்புடன் இயங்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவர் கட்டமைப்பு, அமெரிக்காவுடன் வாழ்நாள் உறவை நீட்டித்துக்கொள்ள வேண்டும் என்ற ஈர்ப்பு ஆகியவற்றையும் இது வெளிக்காட்டுகிறது!

அமெரிக்காவில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்கள் எஜுகேஷன் யு.எஸ்.ஏ., (educationusa.state.gov) ஆலோசனை மையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு நான் பரிந்துரைக்கிறேன். இந்தியாவின் 7 பகுதிகளிலுள்ள ஆலோசனை மையங்கள், அமெரிக்காவில் உயர்கல்வி பயில்வது குறித்த துல்லியமான மற்றும் விரிவான தகல்வகளை அளிக்கின்றன!

இணையதளம் வழியாகவும், அமெரிக்க மையங்கள் வாயிலாகவும் மட்டுமின்றி உள்ளூர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இத்தகைய தகவல்களை உஞீதஞிச்tடிணிணக்குஅ மையங்கள் மாணவர்களுக்கு வழங்குகின்றன. இந்த ஆண்டும் அம்மையத்தின் சார்பாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கண்காட்சி ஏழு நகரங்களில் நடக்கவிருக்கிறது.

அமெரிக்கா, பன்முகத்தன்மையை மதிக்கிறது. அதனடிப்படையில், பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மாணவர்களும் அமெரிக்கா வந்து படிப்பதற்கு ஊக்குவிக்கிறது. கல்வி வளாகங்களில் பன்முகத்தன்மையை பேணுவதற்கு ஆதாரமாக விளங்கும் பன்னாட்டு மாணவர்களுக்கு அவர்களின் இப்பங்களிப்பை உணர்த்தும் வகையில் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

இன்றைய நிலவரப்படி, அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களில் ஒவ்வொரு ஆறாவது மாணவரும் இந்தியர் ஆவர். அவர்கள், பல்கலைக்கழகத்தில் மட்டுமின்றி, சுற்றியுள்ள சமூகத்துக்கும் பல்வேறு வகைகளில் பங்காற்றி வருகிறார்கள். பன்னாட்டு மாணவர்களுக்கு உகந்த மற்றும் பாதுகாப்பான சூழலை அளிப்பதில் அமெரிக்க கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் பெருமிதம் கொள்கின்றன.

மாணவர்களின் நலனிலும், பாதுகாப்பிலும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் எச்சரிக்கையுடன்கூடிய கவனம் செலுத்துவது, நற்பேறு. #YouAreWelcomeHere என்ற சமூக ஊடகச் செயல்பாடு மூலமாக, பல்வேறு பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு தனித்தன்மை வாய்ந்த செய்திகளை அனுப்புகின்றன.

அவர்களுடன் இணைந்து நானும் இந்திய மாணவர்களை அமெரிக்காவில் படிக்க வரவேற்கிறேன். அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் நீங்கள் எதிர்பார்க்கும் கல்வி வாய்ப்புகளை அளிப்பதுடன் உங்கள் வேலை மற்றும் வாழ்க்கை சார்ந்த குறிக்கோள்களை அடைவதற்கும் உதவி புரியும். வாழ்த்துக்கள்!  

-மேரிகே லாஸ் கார்ல்ஸன், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் (பொறுப்பு), அமெரிக்கத் தூதரகம், புதுதில்லி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us