தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்!

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்!

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்!


ஜூன் 09, 2017 12:00 AM

ஜூன் 09, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 09, 2017 12:00 AM ஜூன் 09, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் நுழைவுத் தேர்வுகள் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறுவது நல்லது தான். ஆனால், அதற்கு சாதகமான சூழல்களை முதலில் அனைத்து நிலைகளிலும் உருவாக்க வேண்டுமே!

பள்ளி கல்வி நிலையைப் பொறுத்தவரை, ஒரு மாநிலங்களைப் போல் மற்ற மாநிலங்கள் இல்லை. பல்வேறு பாடத்திட்டங்கள் பல்வேறு தர நிலைகளில் உள்ளன. இத்தருணத்தில், வேறு வேறு பாடத்திட்டங்களை பின்பற்றும் மாணவர்கள் அனைவருக்கும், குறிப்பிட்ட ஒரே பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது எப்படி சரியானதாக இருக்கும்?

அரசாங்கம் முதலில், நுழைவுத்தேர்வை எதிர்கொள்ளும் அளவிற்கு பள்ளி பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, மாநில பாடத்திட்டங்களை நுழைவுத் தேர்வு பாடத்திட்டத்திற்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும். இல்லையெனில், அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைவதை தவிர்க்க முடியாது!

உயர்கல்வியைப் பொறுத்தவரை, அரசு கல்வி நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கைகளே எடுக்கப்படுகின்றன. அங்கீகாரம் முதல் ஆராய்ச்சி உதவித்தொகை வரை அனைத்தும், அரசாங்க கல்வி நிறுவனங்களுக்கு எளிதாக கிடைக்கின்றன. ஆராய்ச்சிகளுக்கு வழங்கப்படும் நிதியில், 90 சதவீதம் அரசு கல்வி நிறுவனங்களுக்குத்தான் செல்கின்றன. மீதமுள்ள 10 சதவீத நிதி தான் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில், வேடிக்கையான விசயம் என்னவெனில், அரசு கல்வி நிறுவனங்கள் மொத்தம் 10 சதவீதம் தான். ஆனால், தனியார் கல்வி நிறுவனங்கள் 90 சதவீதம் உள்ளன!

உயர்கல்வி மேலும், மேலும் வளர தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது இத்தருணத்தில் உணரப்பட வேண்டும். நம் நாட்டில், தனியார் நிறுவனங்கள் வந்த பிறகுதான், ஒவ்வொரு துறையிலும் ஏராளமான நிபுணர்கள் உருவானார்கள். நம் நாடு பொருளாதாரத்தில் வளரும் நாடாக இருந்தபோதிலும், சிறந்த கல்வி மையமாக உருவாகக் காரணம், தனியார் நிறுவனங்களின் வருகையால் தான்! ஆகவே, தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், புதிய வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் 19 லட்சம் மாணவர்கள் இன்ஜினியரிங் படித்து கல்லூரியை விட்டு வெளியேறுகின்றனர். பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் இல்லை. தொழில் நிறுவனங்களை ஊக்குவித்து, வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும். அதற்கான உரிய நடவடிக்கைக்ளை அரசு மேற்கொள்ள வேண்டும்!

இந்தாண்டு எங்கள் கல்வி நிறுவனத்தில், பார்மஸி, ஏரோநாடிக்ஸ், டிசைன், பாரின்சிக் உள்ளிட்ட புதிய படிப்புகளை துவங்கியுள்ளோம். மாணவர்கள் கல்வி மற்றும் ஒழுக்கம் இரண்டிற்கும் முக்கியத்துவம் தரவேண்டும். எங்களது கல்வி நிறுவனங்களில் முதலில் அதைத்தான் கற்றுக்கொடுக்கிறோம்.

- ஏ.சி.எஸ். அருண்குமார், தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம், மதுரவாயல், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us