தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/திறமையற்ற இன்ஜினியர் என்று யாருமில்லை!

திறமையற்ற இன்ஜினியர் என்று யாருமில்லை!

திறமையற்ற இன்ஜினியர் என்று யாருமில்லை!


ஜூன் 13, 2017 12:00 AM

ஜூன் 13, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 13, 2017 12:00 AM ஜூன் 13, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன், ஆயிரம் பேர் மட்டுமே இன்ஜினியரிங் படிக்க வசதி இருந்தது. தனியார் கல்வி நிறுவனங்களின் வருகையால், இன்று அதன் எண்ணிக்கை மூன்று லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் ஆண்டுதோறும், மாநிலம் முழுவதும் ஐந்தாயிரம் மாணவர்கள் இலவசமாக கல்வி கற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது!

நமது நாட்டில் இருந்து, இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஐ.டி., ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில், இன்ஜினியரிங் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. உலக சந்தையில் நிலவும் மந்த நிலை காரணமாக தற்போது தொழில் சற்று பாதித்துள்ளது. விரைவில் நெருக்கடியில் இருந்து மீளும்.

நாடு முழுவதும், 30 லட்சம் பேர் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆண்டுக்கு, 10 சதவீதம் பேர் பல்வேறு காரணங்களால் பணியை விட்டு வெளியேறுகின்றனர். இதனால், புதிய வேலைவாய்ப்பு இல்லாவிட்டாலும் ஆண்டுக்கு சராசரியாக, 3 லட்சம் பேருக்கு வேலை நிச்சயம் கிடைக்கும்.

காற்றாலை, சூரிய ஒளி போன்ற மரபு சாரா மின்உற்பத்தி திட்டங்களில் தமிழகம் சிறப்பாக உள்ளது. எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சி பெறும். இவை தவிர, கூகுள் நிறுவனத்தின் தானியங்கி கார் தயாரிப்பு உள்ளிட்ட எந்த ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தவும் இன்ஜினியரிங்துறையின் பங்களிப்பு அவசியம். பெரும்பாலான திட்டங்களில் அனைத்து இன்ஜினியரிங் துறை மாணவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. இவற்றால், சிறந்த இன்ஜினியரிங் மாணவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்.

எங்கள் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும், தொழில் நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் செயல்வழியில், கல்வி கற்பிக்கப்படுகிறது. இதனால், படித்தவுடன் தொழில் நிறுவனங்களில் நேரடியாக பணியாற்றும் வகையில் மாணவர்கள் தயாராகின்றனர்.

என்னை பொறுத்தவரை, திறமையற்ற இன்ஜினியர் என்று யாருமில்லை. அவ்வாறு இருந்தால் இந்திய நிறுவனங்களில் வெளிநாடுகளை சேர்ந்த இன்ஜினியர்கள் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஐ.டி., நிறுவனங்கள் துவக்கப்பட்ட காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைத்தது. அன்று தொழிலாளர் தேவை அதிகம் இருந்தது; இன்று குறைந்துள்ளது. இதனால், கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு மட்டும் தற்போது வேலை கிடைக்கிறது.

படித்து பட்டம் பெறும் மாணவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவது, அரசின் கடமையாகும். மாறி வரும் காலகட்டத்துக்கு ஏற்ப, இன்ஜினியரிங் கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டியதும் அவசியம். அனைத்து துறைகளிலும், தனியார்மயமாக்கலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுவே, தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்!

-தங்கவேல், தலைவர், ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரி, நீலம்பூர், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us