தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நூலகத் துறை!

நூலகத் துறை!

நூலகத் துறை!


ஜூன் 14, 2017 12:00 AM

ஜூன் 14, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 14, 2017 12:00 AM ஜூன் 14, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுவாக, ஒரு நூலகம் என்றால் ஏராளமான புத்தகங்களும், செய்தித்தாள்களும், இன்னபிற தகவல் திரட்டுகளும் குவிந்திருக்கும் ஒரு இடம். ஆனால், இன்று அதன் முகம் மாறிவிட்டது! ஏராளமான தகவல் திரட்டுகளை எளிதில் அடையும் வகையில், நவீன தொழில்நுட்பம் அதில் புகுத்தப்பட்டுள்ளது. இதனால், நேரம் மட்டுமல்லாது, இடமும் மிச்சமாகிறது. இத்தகைய நூலகத்தை பராமரிப்பவர், ‘நூலகர்’ எனப்படுகிறார். அவரின் பணி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

நூலகப் படிப்பு
லைப்ரரி மற்றும் இன்பர்மேஷன் சயின்ஸ் என்பது ஒரு பட்டப்படிப்பு. இந்த படிப்பானது, இளநிலை மற்றும் முதுநிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படுகிறது. இளநிலை படிப்பு ஒரு வருட கால அளவு கொண்டது மற்றும் இதைப் படிக்க ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்பானது, இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில கல்வி நிறுவனங்களால், தொலைதூர கல்வி முறையிலும் வழங்கப்படுகிறது.

இந்த படிப்பிற்கான பாடத்திட்டத்தில், நூலக நிர்வாகம் (பெறுதல் மற்றும் சரிபார்த்தல் உள்ளிட்டவை), வரவு-செலவு திட்டம், தனிப்பட்ட நிர்வாகம், வரிசைப்படுத்துதல், நெட்வொர்கிங், ஆட்டோமேஷன், தகவல் மூலங்கள், பொருட்களை பாதுகாத்தல், ஆராய்ச்சி முறைமை, பொது நூலகம் மற்றும் கல்வி நிறுவன நூலகம் உள்ளிட்ட பல பிரிவுகள் அடங்கியுள்ளன.

உயர்கல்வி
டெல்லி பல்கலை போன்ற கல்வி நிறுவனங்களில், முதுநிலை படிப்பில், தகவல் அமைப்பு, அறிவு அமைப்பு, வரிசைப்படுத்தல் மற்றும் வகைப்படுத்தல் போன்ற விஷயங்களில் ஆழமான பாடங்கள் உள்ளன. மேலும், மேம்படுத்தப்பட்ட நூலக வரிசைப்படுத்தல் (புத்தகமல்லாத பொருட்கள்), மேம்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், ஆராய்ச்சி மற்றும் புள்ளியியல் முறைகள், நூலக மற்றும் தகவல் சேவைகளை சந்தைப்படுத்தல், தகவல் சேகரிப்பு மற்றும் மீட்கொணர்தல்,  கல்வி நிறுவன நூலகம், ஆராய்ச்சி நூலகம், மருத்துவ அறிவியல் நூலகம், வேளாண் அறிவியல் நூலகம் மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நூலகம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இதில் அடங்கியுள்ளன.

சவால்கள்
நூலகம் மற்றும் தகவல் சேவைகளில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பலவிதமான தொழில்நுட்ப மாற்றங்களை, நூலகப் பாடத்திட்டமானது இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது இத்துறை நிபுணர்களின் கருத்தாக உள்ளது. கம்ப்யூடிங் மற்றும் வெப் கன்டென்ட் மேலாண்மை மற்றும் மேம்பாடு ஆகிய விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

வாய்ப்புகள்
ஒரு கல்லூரியைப் பொறுத்தளவில், தலைமை நூலகர் என்பவர் பேராசிரியருக்கு சமமானவர் மற்றும் பேராசிரியருக்கு நிகரான ஊதியமும் பெறுகிறார். துணை நூலகர் என்பவர் அசோசியேட் பேராசிரியருக்கு சமமாக கருதப்படுகிறார். இன்றைய நிலையில், பள்ளி, கல்லூரி மற்றும் பலவிதமான கல்வி நிறுவனங்களில் இப்பணியிடம் உள்ளது. டெல்லி பல்கலை போன்ற பெரிய இடங்களில் படித்து, இத்துறையில் பட்டம் பெற்று, பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பெரும் சம்பளம் மிக அதிகம். எனினும், பொதுவாக இத்துறையில் வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் மற்றும் காலியாக உள்ள பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்ற கருத்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us