தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கதவுகள் தானாக திறக்கும்!

கதவுகள் தானாக திறக்கும்!

கதவுகள் தானாக திறக்கும்!


ஜூலை 03, 2017 12:00 AM

ஜூலை 03, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 03, 2017 12:00 AM ஜூலை 03, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்ற  ஒரு பழந் தமிழ் வரி, நம்மில் பலருக்கும் சிறிய வயதில் கேட்ட நினைவு இருக்கலாம்!

‘முன்னேறுவது எப்படி?’ என்று உலக அறிஞர்கள் அவரவர் மொழியில் சொன்னதையெல்லாம், நாம் தேடித்தேடிப் படிக்கும் இன்றைய காலக்கட்டத்தில், நவீன அறிவியல் உலத்தை நினைத்துக்கூட பார்த்திராத, ஆயிரம் காலத்திற்கு முந்தைய தமிழன், நமது வாழ்க்கை புரிதலுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், நமது தமிழ் மொழியிலேயே எழுதிவைத்து விட்டுப் போன இதுபோன்ற ஆயிரம் ஆர்த்தமிகு வரிகளின் அர்த்தத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னேற்றப் பாதையின் நுழைவு வாயில் எங்கு இருக்கிறது? என்று இனியும் தேடித் தேடி அலைந்து நொந்துகொள்ள வேண்டாம். அதைத் தான் நம் முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்களே!

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் வெற்றி தோல்வி அனைத்துக்கும் நாம் தான் காரணம்! நம் செயல்களே முழுக்கக் முழுக்க  காரணம்! அதைப் புரிந்து கொண்டால், நாம் முன்னேற்றப் பாதையின் நுழைவு வாயிலுக்கு வந்து விட்டோம் என்று அர்த்தம்!

நம் வெற்றிக்கான காரணங்களும் சரி, தோல்விக்கான காரணங்களும் சரி, அதற்கான முழுப் பொறுப்பு நம்மையே சாரும்!

நம் சூழ்நிலை, உறவு, ஊர் அனைத்தையும் நம்மால் மாற்ற முடியாது. ஆனால் அவைகளுக்கு ஏற்ப நம்மால் நம்மை மாற்றிக் கொள்ள முடியும்! இது வரை நாம் அடைந்த தோல்விகளுக்கு காரணம் நம் செயல்பாடுகளே என்பதை நாம் புரிந்து கொண்டால், நம் செயல்பாடுகளை வெற்றியை நோக்கி திருப்பி விடுவது சுலபம்!

அதை விட்டு விட்டு, நம் தோல்விக்கு புதுப் புதுக் காரணங்களை கண்டுபிடித்து மற்றவர்கள் மேல் பழி சுமத்துவதை உடனே விட்டு விடுங்கள்!

இன்று நாம் வாழும் இந்த வாழ்க்கை நம் செயல்களால் தான் அமைந்திருக்கிறது என்றால், நாம் விரும்பியபடி நம் வாழ்க்கையை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதற்கு ஏற்ப, அந்த செயல்களை மாற்றி அமைப்போம்!

பொன் போல பாதுகாக்க வேண்டிய இத்தகைய வாழ்க்கை தத்துவங்கள் அனைத்தும், நம் முன்னோர்கள் ஏதோ யாருக்கோ சொல்லிவைத்துள்ளார்கள் என்று மேம்போக்காக இருந்துவிடாமல், அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை நாம் நமது அன்றாட வாழ்விலும் பயன்படுத்த பழகவேண்டும்! அப்போது, முன்னேற்றப் பாதையில் கதவுகள் தானாக திறந்து வழி விடும்!

-துடுப்பதி ரகுநாதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us