தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/‘பிரின்டிங் டெக்னாலஜி’

‘பிரின்டிங் டெக்னாலஜி’

‘பிரின்டிங் டெக்னாலஜி’


ஜூலை 04, 2017 12:00 AM

ஜூலை 04, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 04, 2017 12:00 AM ஜூலை 04, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொடர்பியல் துறையில் மிகவும் சக்தி வாய்ந்தது, அச்சு ஊடகங்கள்! புத்தகம், செய்தித்தாள் போன்றவைகளில் எவ்வாறு சொற்கள் அச்சிடப்படுகின்றன? அதன் தொழில்நுட்பங்கள் என்ன? என்பதை கற்றுக் கொடுக்கும் பிரத்யேக படிப்பு ‘பிரின்டிங் டெக்னாலஜி’.

என்ன கற்கலாம்
அச்சகங்களின் செயல்பாடுகள் மற்றும் நுட்பங்கள், லித்தோகிராபி மற்றும் ஆப்செட் பிரின்டிங், டிஜிட்டல் பிரின்டிங், கிராபிக்ஸ் மற்றும் டிசைன், ப்ளேட்ஸ், இங்க், அச்சு தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள், நிறங்கள், மென்பொருள் டிஜிட்டல் பைல் ஸ்டோரேஜ், மெட்டீரியல் சயின்ஸ், டெக்னாலஜி ஆப் பிரின்டிங் அண்ட் பேக்கேஜிங், சயின்ஸ் அண்ட் மேத்மெடிக்ஸ், வர்த்தகம் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பாடப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

படிப்புகள் மற்றும் தகுதிகள்
டிப்ளமோ இன் பிரின்டிங் (3 ஆண்டுகள்): கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று பத்தாம் வகுப்ப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பி.டெக்., / பி.இ., பிரின்டிங் மற்றும் பேக்கேஜிங் டெக்னாலஜி (4 ஆண்டுகள்): இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக எடுத்து பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பி.வோகேஷனல் இன் பிரின்டிங் டெக்னாலஜி மற்றும் பிரின்டிங் அண்ட் பப்ளிஷிங் (3 ஆண்டுகள்): பிளஸ் 2வில் தேர்ச்சி.

எம்.இ., / எம்.டெக்., பிரின்டிங் டெக்னாலஜி (2 ஆண்டுகள்): பி.டெக்., அல்லது பி.இ., பிரின்டிங் அல்லது பேக்கேஜிங் டெக்னாலஜி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு
மத்திய மற்றும் மாநில அச்சு நிறுவனங்கள், ஆப்செட் பிரிண்டிங், ப்ளெக்சோகிராபி, ஸ்கிரீன் பிரிண்டிங், தனியார் அச்சு ஆலைகள், வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் பிரின்டிங், மென்பொருள் அச்சு தொழில் நிறுவனம், மின்னணு அச்சு வெளியீடு, கலர் மேனேஜ்மெண்ட் சொல்யூசன் மற்றும் பேக்கேஜிங், புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், அச்சக இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்கள், இ-பப்ளிஷிங் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் இப்படிப்பைப் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். தற்போது பிரின்டிங் டெக்னாலஜி படித்த மாணவர்கள் சாப்ட்வேர் நிறுவனங்களிலும் வேலைக்கு சேரலாம்.

பிரபல கல்வி நிறுவனங்கள்

இளநிலை பட்டப்படிப்பு:
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
அவனசிலிங்கம் பல்கலைக்கழகம், கோவை
காலிகட் பல்கலைக்கழகம், கேரளா
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா

முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்புகள்:
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
குரு ஜம்பேஷ்வர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஹரியானா
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா
மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மணிப்பால்
சோமனி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட், ஹரியானா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us