தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நடைமுறை கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் சாத்தியம்!

நடைமுறை கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் சாத்தியம்!

நடைமுறை கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் சாத்தியம்!


ஆக 01, 2017 12:00 AM

ஆக 01, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 01, 2017 12:00 AM ஆக 01, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகின் தொழில்நுட்ப அத்தியாயத்தின் அடுத்த கட்டமாக திகழும் டிஜிட்டல் மாற்றம், உயர் கல்வி பிரிவிலும் செயலாற்ற தொடங்கியுள்ளது.

கிளவுட் கம்ப்யூட்டிங், பிக் டேட்டா, அனலிட்டிக்ஸ், மொபிலிட்டி, மெக்கானிக்கல் தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ் மற்றும்  ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பாடங்களில், மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கல்வி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளன.

ஆசிரியர்களும் கற்க வேண்டும்
டிஜிட்டல் திறன் மிக்க மாணவர்களை உருவாக்க, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், திறம் பெற்ற ஆசிரியர்களால் மட்டுமே,  சாத்தியம் ஆகும். தரம் வாய்ந்த தொழில்நுட்ப கல்வியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் நோக்கில், பல்வேறு, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பி ஸ்கூல்ஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் வகுப்பறை தொடங்கி ஆய்வகங்கள் வரை  டிஜிட்டல் தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வருகின்றனர். அதனால், இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் தினசரி, தங்களின் தொழில்நுட்ப  திறமைகளை ஆசிரியர்கள் மேம்படுத்தி கொள்வது அவசியம்.

ஆராய்ச்சியில் மேற்கத்திய நாட்டு பல்கலைக்கழகங்களை ஒப்பிடுகையில் ஆராய்ச்சி வழி கல்வியில் இந்தியா இன்னும் பின்தங்கியே உள்ளது என ஏ.சி.எம்., ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையை மாற்ற, சிறந்த பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடப் பிரிவில் உள்ள 250 பிஎச்.டி., ஆசிரியர்களுக்கு பதிலாக ஆயிரம் பிஎச்.டி., மாணவர்கள் தேவை.

புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் மற்றும் சிறந்த தொழில்முனைவோராக மாணவர்களை உருவாக்கவும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், ஆராய்ச்சி வழி கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறந்த பயிற்சியினை அவர்களுக்கு வழங்குவது மிக அவசியம்.

இணைக்க வேண்டும்
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உற்பத்தி செய்தாலும், 25-40 சதவீத மாணவர்கள் மட்டுமே வேலை வாய்ப்பை பெறுகின்றனர் என சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

அதனால், கல்வி நிறுவனங்களுடன் மேம்பட்ட டிஜிட்டல் தொழிற்துறையை இணைக்கும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். சிறந்த பாடத்திட்டங்களை, ஒருங்கிணைக்கின்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் மட்டுமே மாணவர்கள் சிறந்த திறனாய்வாளராக மாறுவது சாதியம்.
இணைய வழி கல்வி மூலம், எங்கு இருந்தும் தான் விரும்பும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சிறப்பாக செயலாற்றி அனைத்து துறைகளிலும் வெற்றி பெறலாம்.

-டாக்டர்  சுனில் கண்ணா, துணைத் தலைவர், என்.ஐ.ஐ.டி., பல்கலைக்கழகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us