தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தடைகளை தாண்டுவோம்!

தடைகளை தாண்டுவோம்!

தடைகளை தாண்டுவோம்!


ஆக 02, 2017 12:00 AM

ஆக 02, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 02, 2017 12:00 AM ஆக 02, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்றே ஒரு அப்பாய்ண்ட்மென்ட் கிடைக்குமா? என்ற தொலைபேசிக்கு, ‘ஓகே வாருங்கள்’ என்று பதில் சொன்னார் பிரபல மனநல டாக்டர் ஒருவர். வாட்ட சாட்டமாக ஒரு பையன், அவனின் அம்மா பிறகு அவனின் பெரியம்மா மகள் என்று மூன்று பேர் வந்து நுழைந்தனர் அந்த கவுன்சிலிங் அறைக்குள். ஆலோசகர், மூவரையும் நிமிர்ந்து பார்த்து விட்டு ஒரு கூடுதல் நாற்காலியை எடுத்துப் போட்டார்.

முதலில் தொடங்கியது அந்தப் பையனின் அம்மா தான். சார் குட் மார்னிங், இவன் என் பையன் தீரஜ். நாங்கள் மும்பையில் இருந்து வருகிறோம். இவன் இங்கே சென்னை ஐ.ஐ.டி.,யில் சேர்ந்து மூன்று மாதம் தான் ஆகிறது. அதற்குள் படிப்பை பாதியில் விட்டுவிட்டு எங்களோடு ஊருக்கு வந்து விடுகிறேன் என்று அடம் பிடிக்கிறான். தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு விட்டான். நாங்கள் கதி கலங்கி நிற்கிறோம். என்ன செய்வது என்றே புரியவில்லை.

அந்தப் பெண்மணிகள் இருவரும் கண்களில் நீருடன் இருப்பதைப் பார்த்த அவர், ‘சற்று வெளியே காத்திருங்கள்; பிறகு அழைக்கிறேன் என்றார்’. இப்போது டாக்டரும் தீரஜும் மட்டும் தான் அந்த அறையில்... ‘சார் எப்படியாவது எனது அம்மாவை ‘கன்வின்ஸ்’ செய்து என்னை மும்பை அனுப்பி வையுங்கள்’ என்றான். அது சரி, என்ன நடந்தது சற்று விவரமாக சொல்லுங்கள் என்றார், டாக்டர்.

தீரஜ் தொடர்ந்தான், ‘சார் நான் எதிர்பார்த்த மாதிரி இந்த படிப்பு இல்லை. என்னுடன் படிக்கும் மாணவர்கள் எப்போதும் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கு ஹாஸ்டல் பிடிக்கவில்லை. வகுப்பு நேரம் கடந்து எப்போது வேண்டுமானாலும் நடக்கிறது. எனக்கு இங்கிருந்து தப்பி ஓட வேண்டும் போல உள்ளது. சொன்னால் எனது பெற்றோர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அதனால் தான், நான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன்’ என்ற அவன் முகத்தில் சற்று ஆறுதல் அமைதி தென்பட்டது.

டாக்டர் கேட்டார், ஐ.ஐ.டி.,யில் சேருவது உனது லட்சியம், கனவு என்று நினைத்துத் தானே இரண்டு மூன்று ஆண்டுகள் கஷ்டப்பட்டாய்? இந்தப் படிப்பு முடித்து வாழ்வில் மிக உயரிய விஷயங்களை அடைய வேண்டும் என்று நினைத்தாய் அல்லவா? இந்த படிப்பில் உள்ள கஷ்ட நஷ்டங்களைத் தாண்டி நீ பெறப் போகும் வெற்றிகள், நல்ல வாழ்க்கை உனக்கு முன்பே தெரியாமல் இல்லை அப்படித்தானே?

‘சார் நீங்கள் சொன்னது எல்லாமே உண்மை, ஆனால் இங்கே என்னால் ரிலாக்ஸ் செய்ய முடியவில்லை, இந்த பிரஷர் என்னால் தாங்கமுடியவில்லை. இருப்பினும், எனது கனவு ஒன்றும் கலைந்து விடவில்லை’ என்றான், தீரஜ்.

‘சரி என்ன செய்யலாம்’ என்ற மனநல ஆலோசகரது கேள்வி தீரஜை தீவிரமாக சிந்திக்க வைத்தது. சிறது நேரத்திற்கு பிறகு தீரஜ் சொன்னான், ‘சார், நான் மும்பை செல்லவில்லை. தொடர்ந்து படிக்க முடிவு செய்து விட்டேன். நான் எடுக்க இருந்த தவறான முடிவுக்கு வருத்தப்படுகிறேன்’ என்று!

வெளியே உட்கார்ந்து இருந்த இருவரும் உள்ளே அழைக்கப்பட்டனர். அங்கே முகம் அமைதியாக, புன்னகையுடன் அமர்ந்திருந்த தீரஜை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை; வணக்கம் கூறி விடைபெற்றனர். ‘தாங்க்யூ சார், எனது இலட்சியத்தை புரிய வைத்து விட்டீர்கள்’ என்றான், தீரஜ்!

கனவு மட்டும் காண்பது அல்ல வாழ்க்கை! பல கஷ்டங்களையும், தடைகளையும் தாண்டி வெற்றி பெறுவது தான் லட்சியம் நிறைவேற ஒரே வழி! புரிந்தவர்கள் சாதனை புரிந்தவர்கள் ஆக மாறுகிறார்கள்!

- முனைவர் பாலசாண்டில்யன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us