தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மாணவர்களிடம் விதைக்கிறோம்!

மாணவர்களிடம் விதைக்கிறோம்!

மாணவர்களிடம் விதைக்கிறோம்!


ஆக 30, 2017 12:00 AM

ஆக 30, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 30, 2017 12:00 AM ஆக 30, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்வி என்பது திறமையை வளர்ப்பது! அத்தகைய கல்வி, ஒவ்வொரு மாணவருக்கும் வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் சாராம்சமாக அமைய வேண்டும்!

அதற்காகவே, எங்களது கல்லூரி வளாகத்தில் ‘கிளாஸ் - 1’ நூலகங்களை பிரத்யேகமாக அமைத்துள்ளோம். தனித்துவம் மிக்க ஆய்வகங்கள் வாயிலாக, மாணவர்களின் செய்முறை திறனை மேம்படுத்தப்படுத்துகிறோம்.

மாணவர்களை, ‘கோர் இண்டஸ்ட்ரி’ மற்றும் ‘சாப்ட்வேர் இண்டஸ்ட்ரி’ என அவர்கள் சார்ந்த துறை ரீதியாக, சிறந்த வல்லுனர்களாக வளரும் வகையில், உரிய பயிற்சிகளை முன்னணி நிறுவன வல்லுனர்கள் மூலமும் அளித்துவருகிறோம்.

‘பிரிட்டிஷ் இங்கிலீஷ்’, பிரெஞ்ச், சைனீஷ், ஜாப்பனீஷ் உள்ளிட்ட மொழிகளை கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறோம். இதன்மூலம் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என்பது எளிதாகிறது. பெரும்பாலான மாணவர்களுக்கு படிக்கும் தருவாயிலேயே வேலைவாய்ப்பு உறுதியாகிவிடுகிறது. தொழில்துவங்க விருப்பம் உள்ளவர்களுக்கு, ‘இன்குபேட்டர்’ மூலம் பயற்சி அளிக்கிறோம்.

பயிற்றுவிப்பு முறைகளை பொறுத்தவரை, வகுப்பறையில் 15 நிமிடங்கள் மட்டுமே வகுப்பு நடத்தப்படுகிறது. மீதமுள்ள நேரத்தில் பாடரீதியாக செயல்முறை விளக்கம் அளிக்கிறோம். அடுத்தநாள் நடத்தப்பட உள்ள பாடங்கள் முன்னரே தெரிவிக்கப்படுவதால், மாணவர்கள் வகுப்புகளுக்கு தயாராகி வருகின்றனர். தொடர்ந்து, பாடம் சார்ந்து மாணவர்கள் வகுப்பறையில் கலந்துரையாடுகின்றனர்.

சிந்தனை திறன் இல்லையேல் எதிலும் வளர்ச்சியடைய முடியாது. எனவே, பல்வேறு ‘புராஜெக்ட்’ மூலம் மாணவர்களை சிந்திக்க வைக்கிறோம். பாடரீதியான அறிவை வளர்ப்பதுடன், தொழில் துவங்கும் ஆர்வத்தையும் மாணவர்களிடம் விதைக்கிறோம். இதற்கென, விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

படிப்பு மட்டுமின்றி, விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களையும் ஊக்குவிக்கிறோம். தொழில்நுட்பம் மற்றும் கூடுதல் திறன் சார்ந்து, 52 கிளப்கள் உள்ளன. இவற்றின்மூலம், மாணவர்களிடையே தனித்திறன் அதிகரிக்கிறது. மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களின் பயிற்றுவிப்பு திறனையும், செயல்திறனையும் மேம்படுத்த பயிற்சியளிக்கிறோம்.

மாணவர்களுக்கு ஒழுக்கம் மிக அவசியம் என்பதால் யோகா போன்ற பயிற்சிகளை கட்டாயமாக்கியுள்ளோம். கல்வி மட்டுமின்றி, சமூகம் சார்ந்த சிந்தனைகளையும் வளர்த்துவருகிறோம். இதன்மூலம், பிறருக்கு உதவும் மனப்பான்மை போன்ற நற்குணங்கள் வளர்கின்றன. மொத்தத்தில், மாணவர்கள் முழுமையான மனிதர்களாக கல்லூரியைவிட்டு செல்கின்றனர்!

- எஸ்.வி. பாலசுப்ரமணியம், சேர்மன், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, சத்தியமங்கலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us