தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/‘பவர் இன்ஜினியரிங்’

‘பவர் இன்ஜினியரிங்’

‘பவர் இன்ஜினியரிங்’


ஆக 30, 2017 12:00 AM

ஆக 30, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 30, 2017 12:00 AM ஆக 30, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நமது அன்றாட வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டது மின்சாரம்! மெக்கானிக்கல், எலட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொறியியல் துறைகளிலும் மின்சாரத்தின் தேவை எல்லையின்றி விரிவடைந்துள்ள இன்றைய நிலையில், ’பவர் இன்ஜினியரிங்’ படிப்பு முக்கியத்துவம் பெறுகிறது!

படிப்புகள்
பி.டெக்., அல்லது பி.இ., பவர் இன்ஜினியரிங் படிக்க, பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் ’கேட்’ தகுதிதேர்வை எழுதுவதன் மூலம் சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும். தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எம்.பில்., மற்றும் பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சி படிப்பையும் மாணவர்கள் தொடரலாம்.

பாடப்பிரிவுகள்
ஜெனரேஷன் சப்சிஸ்டம், டிரான்ஸ்மிஷன் சப்சிஸ்டம், டிஸ்ட்ரிபியூஷன் சப்சிஸ்டம் மற்றும் யூடிலிசேஷன் சப்சிஸ்டம் ஆகிய நான்கு துணை அமைப்புகளை கொண்டது, பவர் இன்ஜினியரிங்.

திரவ இயந்திரங்கள், தெர்மோடைனமிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகள், ஹைட்ரோ மின் உற்பத்தி, இயந்திரங்களின் அடிப்படை கோட்பாடுகள், அணு மின் உற்பத்தி, டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த மின் சுற்றுகள், வெப்ப பரிமாற்றம், மின் இயந்திரம், நுண்செயலி மற்றும் மைக்ரோகண்ட்ரோலர், ஜெனரேட்டர்கள், மின் கட்டுப்பாட்டு அமைப்புகள், நவீன மின் உற்பத்தி தொழில்நுட்பம், தெர்மல் பவர் பிளான்ட் உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளில் மின்சாரத்தை பற்றின செயல் விளக்கங்களை முழுமையாக படிக்கலாம்.

தேவைப்படும் திறன்கள்
சிக்கலை தீர்க்கும் திறன், கண்காணிப்பு திறன், எதிலும் விரிவாக கவனம் செலுத்தும் திறன், பகுப்பாய்வு திறன் போன்ற திறன்களை வளர்த்து கொண்டால் இத்துறையில் சிறப்பாக செயலாற்றி சாதிக்கலாம்.

பணி வாய்ப்புகள்
ஸ்டெம் இன்ஜினியர், ஸ்டேஸ்னரி இன்ஜினியர், ஆப்ரேட்டிங் இன்ஜினியர், ஸ்டெம் பிளான்ட் இன்ஜினியர், பாய்லர் இன்ஜினியர், ரெப்ரிஜிரேட்டர் பிளான்ட் ஆப்ரேட்டர், புராஜெக்ட் ஹெட், ஒர்க் ஷாப் மேனேஜர், ஆப்ரேஷன் மேனேஜர், வெரிபிகேஷன் இன்ஜினியர், இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ்ட், டெவலப்மெண்ட் அண்ட் டெஸ்ட் இன்ஜினியர் மற்றும் எலட்ரிக்கல் புராடெக் டிசைனர் உள்ளிட்ட பதவிகளில் பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட், இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), என்.எச்.பி.சி., ஜெய்பே நிறுவனங்கள், ஜின்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களில் இத்துறை சார்ந்த பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு, பெறும் அளவில் வேலைவாய்ப்பளித்து வருகின்றன.

’கேட்’ தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மத்திய அரசின்கீழ் செயல்படும் பொதுத்துறை மற்றும் சில தனியார் தொழில் நிறுவனங்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

முக்கிய கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், கான்பூர், பாம்பே, சென்னை
தேசிய பவர் பயிற்சி நிறுவனம், பரிதாபாத்
ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஹைதராபாத்
மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
ஜி.எம்.ஆர்., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஆந்திரப் பிரதேசம்
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், மேற்கு வங்கம்
அம்ரிதா பல்கலைக்கழகம், கோவை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us