தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/‘தொழில்நுட்ப பார்வை வேண்டும்’

‘தொழில்நுட்ப பார்வை வேண்டும்’

‘தொழில்நுட்ப பார்வை வேண்டும்’


செப் 01, 2017 12:00 AM

செப் 01, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 01, 2017 12:00 AM செப் 01, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

‘பொறியியல் படித்தால் வாழ்க்கை வளமாகும்’ என்று நம்பி பல பெற்றோர் அரும்பாடுபட்டு தங்களது குழந்தைகளை கல்லூரியில் சேர்க்கின்றனர். இதை உணர்ந்து, மாணவர்கள் ஒவ்வொருவரும், முதலாமாண்டிலேயே அடுத்தடுத்த ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறோம். என்னென்ன திறன்களை, எப்படி வளர்க்கப்போகிறோம் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும்!

பத்தாம் வகுப்பு தகுதியுள்ள ஒரு வேலைக்கு பிஎச்.டி., படித்தவர்கள் கூட விண்ணக்கும் அவல நிலை நம் நாட்டில் நிலவுகிறது. இது வருந்தத்தக்கது. பி.இ., படித்த மாணவர், ஒரு பல்பை பொறுத்துவதற்கே பயப்படும் நிலையில் இருந்தால், அவர் படித்த படிப்பால் அவருக்கும் சரி, சமுதாயத்திற்கும் சரி பயன் என்ன? ‘எதற்காக பொறியியல் படித்தோம்’ என்பதே தெரியாமல் படித்து முடித்தவர்களை இன்று பார்க்க முடிகிறது. வாழ்க்கையும், படிப்பும் வேறு வேறு அல்ல. இரண்டையும் இணைத்தே பார்க்கும் மனப்பக்குவம் வேண்டும். வாழ்க்கையை மேம்படுத்துவதற்கே கல்வி!

நம்மை நாம் மேம்படுத்திக்கொண்டால் உலகில் எங்கு சென்றாலும், திறம்பட செயலாற்ற முடியும். இவ்வளவு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லிப் பயன் இல்லை. நாட்டையும், அரசாங்கத்தையும், கல்லூரியையும், குறை சொல்வதை விட்டுவிட்டு, ஒவ்வொருவரும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதே கல்வி நிறுவனங்களின் கடமை. கிடைக்கும் பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்தி, அறிவை வளமாக்கி, கூடுதல் திறன்களை மேம்படுத்தும்போது, வேலை தானாக தேடிவரும். பொறியியல் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரது பார்வையும், தொழில்நுட்ப பார்வையாக இருக்க வேண்டும்.தொழிற்நுட்ப அறிவை எப்படி எல்லாம் மேம்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் மேம்படுத்திக்கொள்ள முனைய வேண்டும்.

‘எனது பார்வை மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கும். புத்தாக்க முறையில் சிந்திப்பேன். அறிய கண்டுபிடிப்பை நிச்சயம் நிகழ்த்துவேன்’ என்று ஒவ்வொரு மாணவரும் தங்களுக்குள்ளேயே கூறிக்கொண்டு, அதை நோக்கியே பயணிக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து அதிமானோர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்றால், அவர்களது குறிக்கோள் சரியாக இருப்பதும், அதற்கான முயற்சியில் ஈடுபடுவதுமே காரணம்.

நாம் ஏன் வேலை தேடுபவராக இல்லாமல், வேலை தருபவராக இருக்கக்கூடாது? என்றும் சிந்திக்க வேண்டும். மாணவர்கள் இணைந்து ஒரு திட்டத்தை உருவாக்கி, வங்கியில் கடன் பெற்று ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கலாமே! அதன் மூலம் 10 பேருக்காவது வேலை வாய்ப்பு அளிக்கலாமே! அதானி, அம்பானி, இன்போசிஸ், மைக்ரோசாப்ட் போன்ற தலைசிறந்த நிறுவனங்கள் எல்லாம் இப்படி உருவானவை தானே!

‘லாபம் தரும் செயலுக்கு கஷ்டம் இருக்காது. நஷ்டம் தரும் செயலுக்குத்தான் கஷ்டம் இருக்கும்’ என்று சொல்வார்கள். செய்யும் செயலை நேரம் தவறாமல், முழு விருப்பத்துடன் செய்தால் ‘கஷ்டமும் இருக்காது, நஷ்டமும் இருக்காது’!

-எஸ்.ஜெயசந்திரன், தலைவர், ஜே.என்.என்., இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங், திருவள்ளூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us