தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/‘கூகுளை’ மட்டுமே நம்ப வேண்டாம்!

‘கூகுளை’ மட்டுமே நம்ப வேண்டாம்!

‘கூகுளை’ மட்டுமே நம்ப வேண்டாம்!


செப் 01, 2017 12:00 AM

செப் 01, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 01, 2017 12:00 AM செப் 01, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உயரிய படிப்பான, ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் தகவல்களை தேட ‘கூகுளை’ மட்டுமே நம்பி இருக்கக் கூடாது, என்று நாட்டின் சிறந்த தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் கல்விநிறுவனமாக கருதப்படும் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் அப் டெக்னாலஜி’ மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது!

அனைத்து முக்கிய தேசிய, சர்வதேச இதழ்களில் இருந்தும் தகவல்களை தேடி கண்டுபிடித்து, மேம்படுத்தி, அவற்றில் இருந்து ஆய்வு செய்ய வேண்டும். நாட்டை முன்னெடுத்து செல்வதற்குரிய புத்தாக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில் திறன் படைத்தவர்களாக பிஎச்.டி., மாணவர்கள் திகழ வேண்டும்.

ஐ.ஐ.டி., போன்ற நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் இருந்து அதிகமான ஆய்வாளர்கள் வர வேண்டும். ஒவ்வொரு பிஎச்.டி., ஆய்வாளரும், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து, அவற்றிற்கு சரியான தீர்வு காண வேண்டும். நிதி ஒரு பிரச்சனையாக அமைந்துவிடுமோ என்று மாணவர்கள் தயங்கத்தேவையில்லை. உரிய தீர்வை கண்டறிய முயல்பவர்களுக்கு நிதி என்றுமே ஒரு தடைக்கல்லாக இருந்ததில்லை என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அறிவுரை வழங்கப்பட்ட இடம்: ஐ.ஐ.டி., காரக்பூர் பட்டமளிப்பு விழா

அறிவுரை வழங்கியவர்கள்:  விஞ்ஞானி மன்மோகன் சர்மா மற்றும் ஐ.ஐ.டி., காரக்பூர் இயக்குனர் பார்த்தா பிரதிம் சக்ரபர்த்தி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us