தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மொழியியலில் சாதிக்கலாமே!

மொழியியலில் சாதிக்கலாமே!

மொழியியலில் சாதிக்கலாமே!


செப் 19, 2017 12:00 AM

செப் 19, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 19, 2017 12:00 AM செப் 19, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று, கல்வி நிறுவனங்களில் ஏராளமான படிப்புகள் வழங்கப்பட்டாலும், அவற்றில் அற்புதமான பிரிவு மொழியியல்! அதிலும் தமிழ் மொழி, திகட்டாத தேன்!

தமிழின் சிறப்புகளை அறியவும், அதை உலகிற்கு எடுத்து சொல்லவும், தமிழ் இலக்கிய படிப்புக்கள் பெரிதும் உதவுகின்றன. உலகின் தொன்மையான மொழியாக திகழும், தமிழ் மொழியில் பட்டப்படிப்பை தொடர்ந்தால், சிறப்பான எதிர்காலத்திற்கு வித்திட முடியாது, என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இது முற்றிலும் தவறு!

படிப்புகள்
பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள் பி.ஏ., தமிழ் இலக்கியம் பட்டப்படிப்பில் சேர்க்கை பெற முடியும். முதுநிலை படிப்புக்கு, தமிழ் மொழியினை ஒரு பாடமாக எடுத்து, ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புக்கு முதுநிலை படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் இசை, நாட்டுப்புற கலை, தமிழ் இலக்கணம் போன்ற பிரிவுகளில் பல்வேறு பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர் வாய்ப்புகள்
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பி.ஏ.,-பி.எட், எம்.ஏ.,-எம்.எட்., அல்லது எம்.ஏ.,-பி.எட்., பயின்றவர்களுக்கு, தமிழாசிரியர் பணி வாய்ப்பு அதிகம். இதேபோல், எம்.ஏ., தமிழ் பட்டப்படிப்புடன் எம்.பி.ல்., அல்லது பிஎச்.டி., படித்தவர்கள், கல்லூரிகளில், பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இவை தவிர, செந்தமிழ் ஆய்வு நிறுவனம் உட்பட அரசின் பல்வேறு துறைகளில் தமிழ் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் சாத்தியம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும் தேர்வுகள் மூலம், தமிழில் பயின்றோருக்கு வாய்ப்புகள் எளிதாகின்றன.

ஊடகத்துறையிலும் ஜொலிக்கலாம்
இளங்களை தமிழ் படித்த பின்னர், தொடர்பியல், இதழியல் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளைத் தேர்வு செய்வதன் மூலம் கலை மற்றும் பண்பாட்டுத் துறை உள்ளிட்ட  துறைகளிலும் வேலைவாய்ப்பைப் பெற முடியும். ஊடகத்துறையில், நிகழ்ச்சி தொகுப்பு, செய்தி வாசிப்பு, எழுத்து, நிகழ்ச்சி தயாரிப்பு ஆகிய பணிகளில் தமிழ் பட்டதாரிகள், தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி, வெற்றி அடைவது சாத்தியம். மேலும், உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் தமிழ் வானொலிகளில், தமிழ் கற்றறிந்தோருக்கு அதிக ஊதியத்துடன்  கூடிய பணிகள் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது!

கல்வி நிறுவனங்கள்
தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தமிழ் துறை சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்றவை, தமிழ் மொழியின் சிறப்பினையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக பாடத்திட்டங்களை வடிவமைத்துள்ளன. தமிழ் சார்ந்த படிப்புகளை தொலைநிலை கல்வி முறையிலும் படிக்கலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us