தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/செவிலியர் எனும் சேவகர்!

செவிலியர் எனும் சேவகர்!

செவிலியர் எனும் சேவகர்!


செப் 15, 2017 12:00 AM

செப் 15, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 15, 2017 12:00 AM செப் 15, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அனைத்து நாடுகளிலும் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் பணிகளில் ஒன்று நர்சிங்! மருத்துவம் மற்றும் சுகாதார துறைகளில், மருத்துவர்களுக்கு அடுத்த பொறுப்பில் இருந்து பணியாற்றுபவர்கள் செவிலியர்களே!

சேவை மனப்பாங்குடன், முகம் சுழிக்காமல், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்து, தோழமை பண்புடன் நோயாளிகளை கவனித்து, அவர்களை நலன் பெற செய்யும் முக்கிய பணிகளில் செவிலியர்கள் ஈடுபடுகின்றனர். இத்தகைய செவிலியர் பிரிவில் சாதிக்கும் வாய்ப்புகள் ஏராளம்.

படிப்புகள்
பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள், இளநிலை படிப்பில் நான்கு ஆண்டுகள் கொண்ட பி.எஸ்சி., -நர்சிங் படிப்பில் சேர்க்கை பெறலாம்.  டிப்ளமோ நிலையில் ஏ.என்.எம்.,( அக்சிலரி நர்சிங் அண்ட் மிட்ஒய்ப்ரி) மற்றும் ஜி.என்.எம்.,(ஜெனரல் நர்சிங் அண்ட் மிட்பீரியர்) ஆகிய படிப்புகள் உள்ளன. இதற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

மேலும், தொலைநிலை கல்வி முறையிலும் மூன்று ஆண்டுகள் கொண்ட பி.எஸ்சி., -நர்சிங் பட்டப்படிப்பு வழங்கப்படுகின்றன. முதுநிலை பட்டப்படிப்பில் எம்.எஸ்சி., மற்றும் போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ படிப்புகள் உள்ளன.

வேவையான திறன்கள்
சகிப்புத் தன்மை, தொடர்பியல் திறன், மருத்துவ நெறிமுறைகளை பின்பற்றுதல், முதலுதவி செய்யக்கூடிய திறனாய்வு, அதீத கவனம், தன்னம்பிக்கை, சூழ்நிலைக்கு ஏற்ப ஒத்துப்போகும் மனோபாவம் மற்றும் உடல் உறுதி ஆகிய திறன்களை வளர்த்து கொள்வது அவசியம்.

பொறுப்புகள்
நோயாளிகளை பரிசோதனை செய்தல், அவர்களது உடல்நிலை, சுவாச நிலை, இரத்த அழுத்தத்தின் விகிதம் மற்றும் இதயத் துடிப்பின் விகிதம் ஆகியவற்றை பதிவு செய்தல், மருத்துவர்களின் ஆலோசனைபடி ஊட்டச்சத்து மருந்து மாத்திரைகளை கொடுத்தல் என, பல்வேறு பொறுப்புகள் செவிலியர்களுக்கு உண்டு. இயல்பாகவே, பெண்களுக்கு பொறுமை மற்றும் ஈகை பண்பு உள்ளமையால், ஆண்களை விட பெண்களே அதிக அளவில் நர்சிங் படிப்பை எடுத்து படிக்கின்றனர் மற்றும் பணி புரிந்தும் வருகின்றனர்.

தேவைகள் அதிகம்
நர்சிங் படித்த பின் வேலை கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படாதது தான் இத்துறையின் சிறப்பம்சம். பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பை முடித்தவுடன், மருத்துவ சுகாதார துறைகளில் எளிதில் வேலை வாய்ப்பை பெற்றுவிடலாம். தகுதித்தேர்வுகள் மூலம் ராணுவம் மற்றும் அரசு மருத்துவ துறைகளில் பணி வாய்ப்பை பெறலாம்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும், செவிலியர்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளன. மேலும்,  இந்திய செஞ்சிலுவைச் சங்கம், இந்திய நர்சிங் கவுன்சில், மாநில நர்சிங் கவுன்சில் மற்றும் நர்சிங் கல்வி நிறுவனங்களில் வாய்ப்புகள் உள்ளன.

முக்கிய கல்வி நிறுவனங்கள்
எய்ம்ஸ் நர்சிங் கல்லூரி- டில்லி
ராஜ்குமாரி அம்ரித் கவுர் ஆப் நர்சிங் கல்லூரி -டில்லி
முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி  கல்வி நிறுவனம் - சண்டிகர்
நிஜாம்ஸ் மருத்துவ அறிவியல் நிறுவனம் - ஐதராபாத்
பல்வேறு மாநிலங்களில் செயல்படும், அரசு செவிலியர் கல்லூரிகள்
நிம்ஹான்ஸ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்ட் நியூரோசயின்ஸ் - பெங்களூரு
இந்திராகாந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us