செப் 27, 2017 12:00 AM
செப் 27, 2017 12:00 AM
மென் திறன், பேச்சு திறன் என்ற திறன்களுக்கு மத்தியில் இன்று பெரு நிறுவனங்களில் உணர்வுசார் நுண்ணறிவை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
உணர்வுசார் நுண்ணறிவு என்றால் என்ன? ஆங்கிலத்தில் இதை Emotional Intelligence என்று கூறுவார். இன்றைய போட்டி உலகில், உணர்வுசார் நுண்ணறிவு, அறிவுசார் நுண்ணறிவை (Intelligent Quotient) விட அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி துக்கம், கோபம், பயம் , பொறாமை என்று பல்வேறு உணர்ச்சிகள் இருக்கும். அது அளவிற்கு மீறி வெளிப்படும் போது நம்மையும், நம் சுற்றத்தாரையும் பாதிக்கும்.
உணர்வுசார் நுண்ணறிவு என்பது ஒருவர் தமது உணர்ச்சிகளையோ, அல்லது மற்றவர்கள் உணர்ச்சிகளையோ அடையாளம் கண்டு, மதிப்பிடு செய்து அதைத் திறம்பட மேலாண்மை செய்யும் ஆற்றலை குறிப்பிடுகிறது. உதாரணமாக, நேர்முகத்தேர்வு செய்பவர், போட்டியாளரிடம் மனோபாவத்தை அவரின் பதில் தோரணை, உடை மொழியை வைத்தே கண்டுபித்துவிடலாம்.
உணர்வுசார் நுண்ணறிவை மேம்படுத்துவது எப்படி?
1. துக்கம், பயம் போன்ற அதீத உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
2 தன்னம்பிக்கை ஊட்டும் விஷயங்களை படியுங்கள்
3. தோல்வி உணர்வை தூர விரட்டுங்கள்.
4. கோபம் நம்மை ஆக்கரமிப்பு செய்யாமல் கட்டுக்குள் வைத்திருங்கள்.
5. உணர்ச்சிவசப்பட்டு எதையும் கூறவோ, செய்யவோ வேண்டாம்.
6. ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் மனப்பக்குவத்தை வளருங்கள் .
7. தியானம் செய்து பழகுங்கள்.
8 எவரிடமும் உங்கள் வெறுப்பை உமிழ்ந்து விடாதீர்கள்
9. மன நிலையை ஒரு ஜென் நிலை போல கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.
ஆரம்பத்தில் நம் உணர்வுகளை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தாலும், நடைமுறையி பழகி விட்டால், வெற்றி நம் பக்கமே.
-எம்.விக்னேஷ், மதுரை
