தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கனடாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள்!

கனடாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள்!

கனடாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள்!


அக் 11, 2017 12:00 AM

அக் 11, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 11, 2017 12:00 AM அக் 11, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கனடாவில் உயர்கல்வி மேற்கொள்ள திட்டமிடும் மாணவர்கள், அங்கு செயல்பட்டு வரும் சர்வதேச தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை அறிந்து கொள்வது சிறந்தது!

டொரொண்டோ பல்கலைக்கழகம், மெக்கில் பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம் போன்றவை, உலகின் சிறந்த 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனித்துவமிக்க பல்கலைக்கழகங்கள்

டொரொண்டோ பல்கலைக்கழகம்: -நர்சிங், விளையாட்டு தொடர்பான படிப்புகள், உடற்கூறியல் மற்றும் உடலியல், புவியியல், கல்வியியல் மற்றும் பயிற்சி போன்ற துறைகளில் உலக தரத்திற்கு ஏற்ற பாடத்திட்டங்களை வடிவமைத்து, மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சியுடன் கூடிய சிறந்த கல்வியை வழங்கிவருகிறது.

மெக்கில் பல்கலைக்கழகம்: உடற்கூறியல் மற்றும் உடலியல், பொறியியல், கனிம மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் ஆர்வம் அதிகம் உள்ள மாணவர்களுக்கான ஏற்ற கல்வி நிறுவனம்.

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்: -புவியியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில், திறன்களை மெருகேற்றிக் கொள்ள விரும்பும் மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடரலாம்.

ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம்: விளையாட்டு தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு ஏற்ற இடம்.

இக்கல்வி நிறுவனங்கள், துறை சார் நிபுணர்கள் மற்றும் கல்வி ஆய்வாளர்களுடன் இணைந்து நடைமுறைகளுக்கு ஏற்ற பாடத் திட்டங்களை வடிவமைத்து, அதன் அடிப்படையில் செயல்முறை மற்றும் ஆராய்ச்சி வழி கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கின்றன.

பாடப்பிரிவுகளுக்கு ஏற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியல்

கலை மற்றும் மானுடவியல்: டொரொண்டோ பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், மெக்கில் பல்கலைக்கழகம், மான்ட்ரியல் டி பல்கலைக்கழகம் மற்றும் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம்.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்: வாட்டர்லூ பல்கலைக்கழகம், டொரொண்டோ பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், குயின்ஸ் பல்கலைக்கழகம், ஒட்டாவா பல்கலைக்கழகம், வேஸ்டன் ஒன்டாரியோ பல்கலைக்கழகம், ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம் மற்றும் மெக்கில் பல்கலைக்கழகம்.

வாழ்க்கை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: டொரொண்டோ பல்கலைக்கழகம், மெக்கில் பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் மான்ட்ரியல் டி பல்கலைக்கழகம்.

இயற்கை அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மேலாண்மை: டொரொண்டோ பல்கலைக்கழகம், மேற்கு ஒன்டாரியோ பல்கலைக்கழகம், மெக்கில் பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் மான்ட்ரியல் டி பல்கலைக்கழகம்.

வாய்ப்புகள்

உற்பத்தி தொழில் நிறுவனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்தியல் தொழிற்துறை நிறுவனங்கள், இரசாயன தொழில் நிறுவங்கள், உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள், வங்கி மற்றும் நிதி மேலாண்மை சேவை நிறுவனங்கள் ஆகிய தொழிற்துறைகள் கனடாவில் அதிகம் செயல்படுவதால், இத்துறைகள் தொடர்பான பட்டப்படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us