அக் 10, 2017 12:00 AM
அக் 10, 2017 12:00 AM
அ நிறம் | அளவு
இன்று பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் இருந்து வரும் அறிவிப்பு ஒலிகளில் 32 சதவீதம், மனிதர்களின் மனோபாவத்தை பாதிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது!
லண்டனில்
உள்ள நாட்டிங்காம் டெரெண்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகளின்படி, பொதுவான ’போன் அப்டேட்’ அறிவிக்கைகள், மொபைல் பயனாளிகளின் எதிர்மறையான உணர்வுகளை தூண்டி விடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பணி நிமித்தமான அறிவிப்பு ஒலிகள், மனிதர்களை அச்சத்திற்கும், படபடப்பிற்கும் உள்ளாக்குகின்றன.எனினும்
, நண்பர்களிடம் இருந்து வரும் குறிஞ்செய்தி அறிவிப்புகள், உற்சாகமூட்டுபவையாக அமைகின்றன, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும்
, மொபைல் அறிவிப்பு சமிக்கைகள், மனிதர்களின் வாழ்வை எளிதாக்கும் என்று நாம் நம்பும் அதே தருணம், நமது உடல் நலத்தை பேணி காப்பதற்கு, மொபைல்போன் பயன்பாடு குறித்த முழுமையான புரிதல் நமக்கு தேவைப்படுகிறது, என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.