நவ 08, 2017 12:00 AM
நவ 08, 2017 12:00 AM
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் - ‘செபி’யின் கீழ் 2006ம் ஆண்டு துவங்கப்பட்டது, ‘நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட்ஸ்’ - என்.ஐ.எஸ்.எம்.,!
பங்கு சந்தைகள் மற்றும் பங்கு பரிவர்த்தனை தொடர்பான நுட்பங்களை மாணவர்களுக்கு கற்று கொடுத்து, அவர்களின் அறிவுசார் திறன்களை மேம்படுத்துவதற்காக இக்கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.
6 பள்ளிகள்
இக்கல்வி நிறுவனம், ஸ்கூல் ஆப் சர்டிபிகேஷன் ஆப் இண்டர்மிடியரிஸ், ஸ்கூல் ஆப் கார்ப்பரேட் கவர்னன்ஸ், ஸ்கூல் பார் இன்வஸ்டர் எஜூகேஷன் அண்ட் பினான்சியல் லிட்ரசி, ஸ்கூல் பார் ரெகுலேட்ரி ஸ்டடீஸ் அண்ட் சூப்பர்விஷன், ஸ்கூல் ஆப் செக்யூரிட்டி எஜூகேஷன் மற்றும் ஸ்கூல் பார் செக்யூரிட்டி இன்பர்மேஷன் அண்ட் ரீசர்ச் ஆகிய 6 சிறந்த பள்ளிகளை வழிநடத்தி வருகிறது.
படிப்புகள்
பி.ஜி.டி.எம்.,( எஸ்.எம்.,) - போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மெண்ட் செக்யூரிட்டீஸ் மார்க்கெட்:
செக்யூரிட்டி மார்க்கெட் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கான தனித்துவம் நிறைந்த, ஒரு வருட முழுநேர படிப்பாகும். இப்படிப்பில் சேர வணிகவியல், கணக்குப்பதிவியல், சட்டம், பொருளாதாரம், கணிதம், புள்ளியியல், பொறியியல் போன்ற ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பில், குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பங்கு சந்தைகள் துறையில் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களும் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
ஈக்விட்டி மார்க்கெட்ஸ், டெபிட் மார்க்கெட்ஸ், கரன்சி அண்ட் கரன்சி டெரிவேட்டிவ் மார்க்கெட்ஸ், இன்வஸ்மெண்ட் பேங்கிங், ரிஸ்க் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பினை பெறுவது எளிது.
பி.ஜி.பி.எஸ்.எம்., - போஸ்ட் கிராஜூவேட் ப்ரொகிராம் செக்யூரிட்டீஸ் மார்க்கெட்:
35 லட்சத்திற்கும் அதிகமான தனிநபர்கள், பங்கு சந்தைகளில் பல்வேறு பிரிவுகளில் பரிவர்தனை செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதால், இத்துறையில் திறமையான நிபுணர்களின் தேவைகள் அதிகம். அதனால், பங்கு சந்தைகளில், நடைமுறை தொழில்முறையில் ஆழமான புரிதலை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட படிப்பு இது!
ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வர்த்தகம், பொருளாதாரம், நிதி மற்றும் மேலாண்மை துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சேர்க்கை முறை: பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
பி.ஜி.டி.க்யூ.எப்.,- போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் குவான்டிடேட்டிவ் பினான்ஸ்
வங்கிகள், வங்கி முகமை, நிதி, ஓய்வூதிய நிதி, தொழில்நுட்ப நிறுவனங்கள், கணக்கியல், ஆலோசனை மற்றும் சட்ட நிறுவனங்கள் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கான ஏற்ற படிப்பு!
இது ஒரு வருட முழுநேர டிப்ளமோ படிப்பாகும். ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும்.
பகுதி நேர படிப்புகள்
பி.ஜி.டி.டி.எஸ்., - போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ இன் டேட்டா சயின்ஸ்
9 மாதங்கள் கொண்ட பகுதிநேர படிப்பு. பினான்சியல் அனாலடிக்ஸ், டேட்டா அனாலடிக்ஸ், மார்க்கெட்டிங், மார்க்கெட் ரிசர்ச் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கான சிறந்த படிப்பு. ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புக்கு எவ்வித வயது வரம்பும் நிர்ணயம் செய்யப்படவில்லை. நேர்முகத் தேர்வு மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும்.
பி.ஜி.டி.எப்.இ.ஆர்.எம்., - போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ இன் பினான்சியல் இன்ஜினியரிங் அண்ட் ரிஸ்க் மேனேஜ்மெண்ட்
வங்கிகள், பி.எம்.எஸ்., தனியார் ஈக்விட்டி நிறுவனங்கள், நிதி, செக்யூரிட்டிஸ் ஆராய்ச்சி நிறுவனங்கள், ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., மற்றும் கே.பி.ஒ., நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை, இப்படிப்பை படிப்பதன் மூலம் பெறலாம். நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
குறுகிய கால படிப்புகள்
சர்டிபிகேட் இன் செக்யூரிட்டீஸ் லாஸ் (சி.எஸ்.எல்.,) மற்றும் சர்டிபிகேட் இன் ட்ரசரி மேனேஜ்மெண்ட் (சி.டி.எம்.,) போன்ற 3.5 மாதங்கள் கொண்ட சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகிறது.
மேலும், தனியார் வங்கிகள் மற்றும் என்.ஐ.எஸ்.எம்., இணைந்து பயிற்சியுடன் கூடிய போஸ்டு கிராஜூவேட் சர்டிபிகேட் இன் செக்யூரிட்டீஸ் மார்க்கெட்ஸ் (பி.ஜி.சி.எஸ்.எம்.,), போஸ்டு கிராஜூவேட் சர்டிபிகேட் இன் கேப்பிடல் மார்க்கெட்ஸ் (பி.ஜி.சி.சி.எம்.,) மற்றும் நிதி மேலாண்மை, நிதி தயாரிப்பு மேலாண்மை துறைகளில் நான்கு மாதங்கள் கொண்ட சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகிறது.
விபரங்களுக்கு: www.nism.ac.in
