டிச 09, 2017 12:00 AM
டிச 09, 2017 12:00 AM
அகில இந்திய அளவில் நடத்தப்படும் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு ‘மேட்’ எனப்படும் மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட்.
அகில இந்திய மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் சார்பாக ஆண்டுக்கு நான்கு முறை பிப்ரவரி, மே, செப்டம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை, லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுவதில் இருந்தே இத்தேர்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.
தகுதிகள்: ஏதேனும் ஒரு துறையில், இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு விபரம்: அகில இந்திய அளவில் நடைபெறும் இத்தேர்வினை, மாணவர்கள் தாள் அடிப்படையில் (பேப்பர் பேஸ்ட் டெஸ்ட்) அல்லது கணினி அடிப்படையில் (கம்ப்யூட்டர் பேஸ்ட் டெஸ்ட்) என அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து எழுதலாம்.
லாங்க்வேஜ் காம்பிரிஹென்சன், மேத்மெட்டிக்கல் ஸ்கில், டேட்டா அனலிசிஸ் அண்ட் டேட்டா சபிஷியன்சி, இன்டெலிஜென்ஸ் அண்ட் கிரிடிகல் ரீசனி, இந்தியன் அண்ட் குளோபல் என்விராண்மெண்ட் ஆகிய ஐந்து பிரிவுகளில், 200 மதிப்பெண்களுக்கு ’அப்ஜெக்டிவ்’ அடிப்படையில், கேள்விகள் கேட்கப்படும்.
விபரங்களுக்கு: www.aima.in
