தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சொல்லக் கூடாத ஒரு வாக்கியம்!

சொல்லக் கூடாத ஒரு வாக்கியம்!

சொல்லக் கூடாத ஒரு வாக்கியம்!


டிச 13, 2017 12:00 AM

டிச 13, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 13, 2017 12:00 AM டிச 13, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உங்கள் இலட்சியத்தில் நீங்கள் வெற்றியடைய வேண்டுமா? அப்படியானால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்பொழுதும் சொல்லக் கூடாத ஒரு வாக்கியம் இருக்கிறது.

அது, ‘எனக்கு நேரம் இல்லை’ என்பதுதான்!

பிரதமர் மோடிக்கும் 24 மணி நேரம் தான்! நமக்கும் அதே 24 மணி நேரம் தான்! நம்மோடு வாழ்ந்த காந்திக்கும் சரி, அப்துல் கலாமிற்கும் சரி, அதே 24 மணி நேரம் தான்! அவர்கள் மட்டும் எப்படி சாதனை படைத்தார்கள்? அவர்கள் வாழ்நாளில் நேரத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யவில்லை. தங்களுக்கு கிடைத்த நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தியதன் விளைவே அவர்களின் சாதனைகள்!

‘தூங்காதே தம்பி! தூங்காதே.... ! நல்ல பொழுதையெல்லாம்
தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்
அல்லும் பகலும் வெறும் கல்லா இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்’!

என்று நம்மை அந்தப் படப் பாடலில் தட்டி எழுப்பிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வாழ்ந்த காலமே 29 வருடங்கள் தான்.

அவர் வாழ்ந்த 29 வருட ஆயுள் காலத்தில் கிடைத்த எல்லா நேரங்களையும் அவர் பயன்படுத்தியதால் தான், அவர் இன்று மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டார்!

நாமும் நமக்கு கிடைத்த நேரத்தை வீணடிக்காமல் முழுமையாக பயன்படுத்திக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் முன்னேறியவர்கள் அனைவருமே தங்களுக்கு கிடைத்த நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தியவர்களே!

உங்களுக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர் வாழ்க்கையில் முன்னேறி பெரிய தொழிலதிபர் ஆகிவிடுகிறார். அவரிடம் போய் நீங்கள் பத்தாயிரம் கடன் கேளுங்கள். உடனே கொடுத்து விடுவார். ஆனால், பொழுதுபோக்காக சினிமாவுக்குப் போய் வரலாம் என்று துணைக்கு கூப்பிட்டுப் பாருங்கள். ஏதாவது சொல்லி தவிர்க்கப் பார்ப்பார்.

காரணம் உங்களுக்கு கொடுத்த பத்தாயிரத்தை நீங்கள் திருப்பிக் கொடுக்க விட்டால் கூட, அவர் சம்பாதித்துக் கொள்வார். ஆனால் உங்களோடு வெறும் பொழுது போக்குக்காக செலவு செய்யும் மூன்று மணி நேரத்தை அவரால் மீண்டும் சம்பாதிக்க முடியாது என்று தெரிந்தவர் அவர்!

இன்றையிலிருந்தே நீங்களும் அப்படி மாறி விடுங்கள்! வாழ்க்கையில் வெற்றியடைந்த அனைவருமே நேரத்தை வீணடிக்காமல் முழுமையாகப் பயன்படுத்த தெரிந்தவர்களே!

- துடுப்பதி ரகுநாதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us