தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சர்வதேச புகழ் பெற்ற ஐ.சி.டி.,!

சர்வதேச புகழ் பெற்ற ஐ.சி.டி.,!

சர்வதேச புகழ் பெற்ற ஐ.சி.டி.,!


ஜன 08, 2018 12:00 AM

ஜன 08, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 08, 2018 12:00 AM ஜன 08, 2018 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெமிக்கல் துறையில் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கான சிறந்த கல்வி நிறுவனம் ஐ.சி.டி., என்று அழைக்கப்படும், ’இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாஜி’!

இந்நிறுவனம், 1993ம் ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ் தொடங்கப்பட்டு, 2008ம் ஆண்டு நிகர்நிலை பல்கலை அந்தஸ்தை பெற்றது.  இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.,), இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.,), தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.எஸ்.இ.ஆர்.,) உள்ளிட்ட மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு நிகரான முக்கியத்துவம் பெற்ற தேசிய கல்வி நிறுவனம்.

ரசாயனம், உயிரியல், பொருட்கள் மற்றும் ஆற்றல் தாயாரிப்பு போன்ற துறைகளில் தொழில்நுட்ப யுத்திகளை கையாளவும், உற்பத்தி சாதனங்களை வடிவமைக்கும் திறன்களை மெருகேற்றி கொள்ளும் விதத்திலும், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, சிறந்த பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இளநிலை படிப்புகள்
கெமிக்கல் இன்ஜினியரிங் (பி.கெம்.இன்ஜி.,)

பி.டெக்., - டைஸ்டப் அண்ட் இன்டர்மீடியேட் டெக்னாலஜி, பைபர் மற்றும் டெக்ஸ்டைல் புராசசிங் டெக்னாலஜி, புட் இன்ஜினியரிங் டெக்னாலஜி, ஆயில், ஒலியோகெமிக்கல்ஸ் மற்றும் சர்பாக்டாண்ட்ஸ் டெக்னாலஜி, பார்மாசூடிகல்ஸ் கெமிஸ்டரி டெக்னாலஜி, பாலிமர் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மற்றும் சர்பேஸ் கோட்டிங் டெக்னாலஜி

இளநிலை பார்மசி (பி.பார்ம்.,)

சேர்க்கை முறை: பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து, பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் ஜே.இ.இ., மெயின் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது.

முதுநிலை பட்டப்படிப்புகள்
மாஸ்டர் ஆப் கெமிக்கல் இன்ஜினியரிங் (எம்.கெம்.இன்ஜி.,)

எம்.டெக்., - டைஸ்டப் அண்ட் இன்டர்மீடியேட் டெக்னாலஜி, பைபர் மற்றும் டெக்ஸ்டைல் புராசசிங் டெக்னாலஜி, புட் இன்ஜினியரிங் டெக்னாலஜி, ஆயில், ஒலியோகெமிக்கல்ஸ் அண்ட் சர்பாக்டாண்ட்ஸ் டெக்னாலஜி, பார்மாசியூடிகல்ஸ் கெமிஸ்டரி டெக்னாலஜி, பாலிமர் இன் ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சர்பேஸ் கோட்டிங் டெக்னாலஜி மற்றும் பர்பியூரி பிளேவர் டெக்னாலஜி, பயோ புராசஸ் டெக்னாலஜி, கிரீன் டெக்னாலஜி மற்றும் புட் பயோ டெக்னாலஜி.

எம்.இ., - பிளாஸ்டிக் இன்ஜினியரிங்
முதுநிலை பார்மசி பிரிவில் (எம்.பார்ம்.,) - டிரக் டெலிவரி டெக்னாலஜி, மெடிசினல் கெமிஸ்டரி மற்றும் மெடிசினல் நேசுரல் புராடெக்ட்)

எம்.எஸ்சி., -இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் மற்றும்  டெக்ஸ்டைல் கெமிஸ்டரி

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை மற்றும் கல்லூரிகளில், இளநிலை  பட்டப்படிப்பில்  பொறியியல் / தொழில்நுட்பம்  / அறிவியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

சேர்க்கை முறை: கேட் மற்றும் கிராஜூவேட் பார்மசி ஆப்ட்டிடியூட் டெஸ்ட்  (ஜி.பி.ஏ,.டி) தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

ஆராய்ச்சி மற்றும் டிப்ளமோ படிப்பு
இங்கு ராசாயன் துறையில் கீழ் வழங்கப்படும் உட்பிரிவுகளில் உள்ள அனைத்து  பாடப்பிரிவுகள், சிவில், எலட்ரிக்கல், எலட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் மற்றும் அறிவியல் பிரிவிலும் ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. முதுநிலை டிப்ளமோ படிப்பில் கெமிக்கல் டெக்னாலஜி மேனேஜ்மெண்ட் படிப்பு வழங்கப்படுகிறது.

விபரங்களுக்கு: www.ictmumbai.edu.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us