தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/எண்ணங்கள் 60 ஆயிரம்!

எண்ணங்கள் 60 ஆயிரம்!

எண்ணங்கள் 60 ஆயிரம்!


ஜன 03, 2018 12:00 AM

ஜன 03, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 03, 2018 12:00 AM ஜன 03, 2018 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எதிரியை இல்லத்தில் நுழைய விட்டாலும், எதிர்மறை எண்ணங்களை உள்ளத்தில் நுழைய விடக்கூடாது!

நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய அறுபதாயிரம் எண்ணங்கள் நமது மனதில் தோன்றுவதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன. எழும் எண்ணங்களைப் பொறுத்தே வாழ்க்கை அமைகிறது. ஆம்! எண்ணங்களே செயல்களாகின்றன. செயல்களே பழக்கங்களாகின்றன. பழக்கங்களே வழக்கங்கள் ஆகின்றன. ஆகவே, எண்ணங்களைக் கவனித்து அவற்றை ஆக்க திசையில் மாற்றியமைத்து விட்டால், வாழ்க்கை வளர்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கிவிடும்.

ஆக, முயற்சியின் சிறகுகளைக் கத்தரிக்கும் எதிர்மறை எண்ணங்களை விரட்டினால், வெற்றிவானில் பறக்கலாம்!

எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்க கீழ்காணும் முயற்சிகள் நிச்சயம் கைகொடுக்கும்.

1. வெற்றிக் காட்சிகளை மனக்கண்ணில் காணுங்கள்
அதாவது உங்கள் முயற்சிகள் வெற்றிபெற்றுவிட்டதாக எண்ணி, அதனால் உங்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்களையும் காட்சியாக மனத்திரையில் காணுங்கள். அககாட்சி ஒருநாள் நிஜமாகும்! நம்புங்கள் நடக்கும்.

2. எதிர்மறை எண்ணத்தை பல நேர்மறை எண்ணங்களால் விரட்டுங்கள்
உதாரணமாக, தேர்வில் தோல்வியுறுவது போல எண்ணம் தோன்றினால், உடனே, தேர்வில் வெற்றி பெறுவது போலவும், அதுவும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைவதாகவும், உயர்கல்வியில் சேர்வது போலவும், அதிலும் தேர்ச்சியடைந்து உயர உயரச் செல்வது போலவும் நேர்மறை எண்ணங்களை உருவாக்கி, தோல்வி என்கிற எதிர்மறை எண்ணத்தை விரட்டியடியுங்கள்.

3. ‘என்னால் முடியும்! எதையும் சாதிக்க என்னால் முடியும்’
இந்த எண்ணத்தை எப்பொழுதும் உள்ளத்தில் உலவ விடுங்கள். வலுக்கட்டாயமாக நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் வலுவிழந்து போகும்.

4.ஊக்கம்தரும் நூல்களைப் படியுங்கள்
வெற்று நிலத்தில் களைகள் தோன்றுவதைப் போல, வெற்று மனவெளியில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். ஆகவே, அடிக்கடி ஆக்க நூல்களை வாசியுங்கள்.

5.உற்சாகமூட்டும் நபர்களுடன் உரையாடுங்கள்
நல்ல நண்பர்கள் வாழ்வின் தூண்களாகவும், துயர்விரட்டும் உற்சாக உரங்களாகவும் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளுக்கு ஒளியூட்டும் உள்ளங்களுடன் பேசுங்கள். வெற்றிக்கனவுகள் உங்கள் இதயவானில் முளைக்கத் தோன்றும்.

இவ்வாறு, எதிர்மறை எண்ணங்களை விரட்டினால், நேர்மறை எண்ணங்கள் நெஞ்சில் குடியேறும்! நேர்மறை எண்ணங்கள் மூலமாக எதையும் சாதித்து சரித்திரத்தில் இடம்பிடிக்க முடியும்! வாழ்த்துக்கள்!

-முனைவர் கவிதாசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us