தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஆல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்)

ஆல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்)

ஆல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்)


பிப் 06, 2018 12:00 AM

பிப் 06, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 06, 2018 12:00 AM பிப் 06, 2018 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவக் கல்வியை வழங்குவதில் நாட்டின் முன்னோடி கல்வி நிறுவனமான ‘எய்ம்ஸ்’, டெல்லி, போபால், புவனேஷ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் செயல்படுகிறது. பிரத்யேக ’எம்ய்ஸ்’ நுழைவுத்தேர்வு மூலமே இவற்றில், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் ’மெரீட்’ மற்றும் ’ரேங்கிங்’ முறையில் கலந்தாய்வு மூலம் மருத்துவ இடங்கள் நிரப்படுகின்றன.

தகுதிகள்: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை பயின்று 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு முறை: 3.5 மணி நேரம் கொண்ட இத்தேர்வு கணினி அடிப்படையில் ஆன்லைனில் நடைபெறும். இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 60 கேள்விகள் வீதம் 180 கேள்விகள், பொது அறிவு மற்றும் பகுப்பாய்வு திறன் பகுதிகளில் 20 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ‘மல்டிபில் சாயிஸ்’ வடிவில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வினாக்கள் இடம்பெறும்.

குறைந்தபட்ச ‘கட் - ஆப்’ மதிப்பெண்கள்: இந்த நுழைவுத்தேர்வில் பொது பிரிவினர் 50 சதவீதம், ஓ.பி.சி., பிரிவினர் 45 சதவீதம், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும்.

‘எய்ம்ஸ்’ மருத்துவ முதுநிலை நுழைவுத் தேர்வு

எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களில் எம்.டி., எம்.எஸ்., எம்.சிஎச்., எம்.டி.எஸ்., ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இந்த நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள் மட்டுமே இந்த நுழைவுத் தேர்வை எழுத முடியும். எம்.டி.எஸ்., படிக்க விரும்பும் மாணவர்கள் பி.டி.எஸ்., முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எம்.டி., மற்றும் எம்.எஸ்., படிப்புகளுக்கு, ‘அப்ஜெக்டிவ்’ அடிப்படையில், 200 கேள்விகள் கேட்கப்படும். தேர்வுக்கு 3 மணி நேரம் ஒதுக்கப்படும். எம்.டி.எஸ்., படிப்புக்கு, 90 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு ஒன்றரை மணி நேரம் வழங்கப்படும். நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே, அனைத்து முதுநிலை பட்டப்படிப்பிலும் மாணவ சேர்க்கை நடைபெறுகிறது.

இவைதவிர, எய்ம்ஸில், பல்வேறு இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 

விபரங்களுக்கு: www.aiimsexams.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us