தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/காலத்தை காதலிப்போம்!

காலத்தை காதலிப்போம்!

காலத்தை காதலிப்போம்!


பிப் 26, 2018 12:00 AM

பிப் 26, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 26, 2018 12:00 AM பிப் 26, 2018 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

‘நேரத்தை எப்படி திட்டமிடுவது’ என்று தெரியாமல் தடுமாறுவதுதான், இன்று பலரது தோல்விக்கான காரணமாக இருக்கிறதே தவிர, வேறுஅல்ல!

பலர், கடினமான வேலைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, சுலபமான பயன்தராத வேலைகளுக்கு முன்னுரிமை அளிப்பார். அதில் சில காலம் சந்தோஷமும் காண்பார். பின், அந்த கடினமான வேலைக்கான சுமையை ஏற்று, முடிக்க முடியாமல் பரிதவிப்பார்கள். ‘திறமைகள் பல இருந்தும், ஒன்றில் கூட என்னால் சோபிக்க முடியவில்லையே’ என அங்கலாய்ப்பவர்களும் இதில் அடங்குவர்!

நம் நேரத்தை பயனுள்ளதாக மாற்றினால், வெற்றி காண நம்மால் நிச்சயம் முடியும்! அதற்கான வழிகள் இங்கே:

* வேலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பிரதான பணிகளுக்கு முக்கியத்துவம் தந்து, அவற்றை முதலில் முடிக்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே, நமது முழு கவனமும் இருக்க வேண்டும்.

* செய்ய வேண்டிய வேலைகளை, பிறரை நம்பி காத்திருக்காமல், முடிந்தவரை நாமே செய்ய வேண்டும். செய்ய இயலாத வேலைகளுக்கு, ‘முடியாது’  என முன்பே சொல்லிப் பழக வேண்டும்.

*‘நாளைக்கு விடுமுறைதானே! நாளை பார்த்துக்கொள்ளலாம்!’ என நினைக்கக்கூடாது. ‘நாளை’ என்பது என்றுமே நம்மால் உணர முடியாத கானல் நீர்.

* பெரிய வேலைகளை சிறிது சிறிதாக பிரித்து செய்வது தன்னம்பிக்கையை வளர்க்கும். தனிப்பட்ட வேலைகள், படிப்பதற்கான நேரம், அலுவலக வேலைகள், குடும்ப வேலைகள் என பிரித்து அதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுதல் சிறந்தது.

* தேவையில்லாத சந்திப்புகளை தவிர்க்க வேண்டும். சிலர் எதிர்மறையாகப் பேசி நம்முடைய நேரத்தையும், நம் உற்சாகத்தையும் வீணடித்துவிட வாய்ப்புண்டு. வெற்றிக்கு துணையாக இருக்கும் நம்பிக்கையானவரை தேர்ந்தெடுந்து, அவர்களை மட்டும் நமக்கு அருகில் வைத்துக்கொள்ளலாம்.

* ஒரு அமைதியான இடத்தை தேர்வு செய்து, திட்டமிடுதல் நலம். நாம் சுற்றியிருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமின்றி, உடல் துய்மையும், மனத் தூய்மையும் மிக முக்கியம்.

* முழு நேரமும், செய்யும் வேலையிலேயே முழ்காமல், நியாயமான உற்சாகம் தரும் பொழுதுபொக்கு அம்சங்களில், நேரத்தை செலவிட வேண்டும்.

* குறிப்பெடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்தல் மிக அவசியம். தினமும், ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் என, நாம் செய்ய வேண்டியவற்றை குறிப்பெடுத்து கொள்ள வேண்டும். அவ்வப்போது, நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாமோ என்று சுயபரிசோதனை செய்துகொள்ளவும் வேண்டும்.

போனால் திரும்ப வராதது “நேரம்” மட்டுமே. காலம் கடந்து உலகம் நம்மைப் பற்றி பேச, காலம் கடந்து வாழ, காலத்தை காதலிப்போம்!

-கிஷோர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us