தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மாணவர்களுக்கும் தேவை யோகா!

மாணவர்களுக்கும் தேவை யோகா!

மாணவர்களுக்கும் தேவை யோகா!


மே 04, 2018 12:00 AM

மே 04, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 04, 2018 12:00 AM மே 04, 2018 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிகளில் யோகா மற்றும் மனப் பயிற்சிகள் அளிப்பதால், மாணவர்களுக்கு மன அழுத்தம் நீங்கி, உடல் மற்றும் மன ஆரோக்கியம் அதிகரிப்பதாக அமெரிக்காவின் டுலனே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்!

அமெரிக்காவில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்முறையில் யோகா மற்றும் பல்வேறு மன ரீதியான பயிற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தினர். பதற்றம் மற்றும் மன அழுத்திற்கான அறிகுறிகள் தென்பட்ட மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு இருவிதமான பயிற்சிகளுக்கு ஆட்படுத்தப்பட்டனர்.

சில மாணவர்களுக்கு யோகா மற்றும் மனப் பயிற்சிகளும், சில மாணவர்களுக்கு கவுன்சிலிங் மற்றும் இதர பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 8 வார நிறைவில், யோகா சார்ந்த பயிற்சிகளில் ஈடுபட்ட மாணவர்களது மன வளம், உளவியல் ரீதியான ஆரோய்க்கியம் மேம்பட்டு இருந்தது ஆய்வில் தெரியவந்தது.

புரொபஷனல் மேம்பாட்டு பயிற்சிகளுடன், பள்ளிகளில் தினமும், யோகா, மூச்சு பயிற்சி மற்றும் மன பயிற்சி அளிப்பதன் அவசியத்தை உணர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் அவற்றை தொடர்ந்து அளிக்க வலியுறுத்துவதாகவும், யோக பயிற்சி, மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்குவதோடு மட்டுமின்றி, கல்வியில் சிறந்து விளங்கவும் உதவுகிறது என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us