தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/‘ஐ.ஐ.டி.,க்கு இணையாக பயிற்சி’!

‘ஐ.ஐ.டி.,க்கு இணையாக பயிற்சி’!

‘ஐ.ஐ.டி.,க்கு இணையாக பயிற்சி’!


மே 14, 2018 12:00 AM

மே 14, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 14, 2018 12:00 AM மே 14, 2018 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடல் நலமாக இருந்தால் தான், வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும்; மனம் நன்றாக இருந்தால் தான், எதையும் புரிந்துகொள்ளவும், புதியதாக ஒன்றை கற்றுக்கொள்ளவும் முடியும். மன நலமாக இருக்க தியானப் பயிற்சியும், உடல் நலமாக இருக்க யோகாவும், உடற்பயிற்சியும் அவசியம் உடலும், மனமும் நலமாக இருந்தால் தான் மாணவர்களால் சிறப்பாக கல்வி கற்க முடியும்! இவைற்றை உணர்ந்தே, எங்கள் கல்லூரியில் யோகா, தியானம் ஆகியவற்றை கட்டாயமாக்கி உள்ளோம்!

சிறப்பான கற்றலுக்கு, கல்வி நிறுவனத்தின் கட்டமைப்புகள் சிறப்பானதாக இருப்பதும் அவசியம். ஆய்வகங்கள், நல்ல ஆசிரியர்கள், ஆராய்ச்சிக்கு உதவும் வகையிலான பாடத்திட்டம் ஆகியவையும், ஒரு சிறந்த கல்வி நிறுவனத்திற்கான அடையாளங்கள். மேலும், ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். இவற்றையும் கடந்து, எங்கள் கல்வி நிறுவனத்தில் படிக்கும்போதே வருமானம் பெறும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து ஆங்கில பயிற்சி அளிக்கிறோம். அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பயிற்சி அளிப்பது நன்றன்று. மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாய்ப்புகள் மிகுந்த பிக் டேட்டா, டேட்டா அனலிட்டிக்ஸ், ஹேக்கிங் உள்ளிட்ட பலதரப்பட்ட துறைகளில், பல்வேறு நிறுவனங்களில் பயிற்சி அளிக்க உதவுகிறோம். சுயமாக தொழில் துவங்கவும், மிகப்பெரிய நிறுவனங்களில் பணி வாய்ப்பை பெறுவதற்கும் உரிய முயற்சியும், ஊக்கமும் அளிக்கிறோம்.

இவை அனைத்தையும் சிறப்பாக செய்வதால்தான், துறை வாரியாக கல்வி நிறுவனங்களின் தரத்தை வரிசைப்படுத்தும் நாக், என்.ஐ.ஆர்.எப்., போன்ற மத்திய அமைப்புகளில் எங்கள் கல்லூரிக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. பாடத்திட்டம், சுத்தம், ஆரோக்கியம், ஆசிரியர்கள் மேம்பாடு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதால் என்.ஐ.ஆர்.எப்., பட்டியலில் முதல் நூறு கல்வி நிறுவனத்திற்குள், எங்கள் கல்லூரி இடம் பிடித்துள்ளது.

மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிதியை பெறுவதால், வளர்ச்சிக்கான திட்டங்களில், நிதியை பற்றி கவலைப்படாமல் செயல்படுகின்றன. தனியார் நிறுவனங்களின் நிதி நிலை அப்படி அல்ல. என்றபோதிலும், மாணவர்கள் சிறப்பான கல்வி பெற தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திகொடுத்து, ஐ.ஐ.டி., தரத்திற்கு இணையாக எங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்!

வாழ்க்கைக்கு பணம் முக்கியம் தான் என்றபோதிலும், பணம் மட்டுமே வாழ்க்கையல்ல; வாழ்வின் அர்த்தத்தை அறிந்து, மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி? என்பதையும், மாணவர்கள் அறியச் செய்கிறோம்!

கல்வியின் நோக்கம்
நான்கு ஆண்டுகால இன்ஜினியரிங் படிப்பில் மாணவர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் ஆர்வம் செலுத்தினால், அடுத்த 40 ஆண்டுகால வாழ்க்கை சிறப்பானதாக அமையும். வாழ்க்கையில் சவால்களை சமாளித்து வெற்றி பெறுவதற்குத் தேவையான அறிவையும், திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் கல்வியின் பிரதான நோக்கமும் கூட... அத்தகைய நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டே எங்கள் கல்லூரி செயல்படுகிறது!

-எஸ்.வி.பாலசுப்ரமணியம், தலைவர், பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சத்தியமங்கலம், ஈரோடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us