தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வணிகவியல் துறை

வணிகவியல் துறை

வணிகவியல் துறை


மே 16, 2018 12:00 AM

மே 16, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 16, 2018 12:00 AM மே 16, 2018 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

என்றுமே சரிவு பாதையில் செல்லாத, வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் படிப்புகளில் மிக முக்கியமானது வணிகவியல்!

முக்கியத்துவம்
வங்கி, பங்குச் சந்தை, அக்கவுண்டிங், பினான்ஸ், மார்க்கெட்டிங், ஆடிட்டிங் என மாணவர்களுக்கு ஆர்வமுள்ள பிரிவினை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். எனினும், இத்துறையில், பணி செய்வது என்பது சவால் நிறைந்த ஒன்று. முடிவெடுத்தல், திட்டமிடுதல், ஒப்பீடுகளின் மூலம் பகுப்பாராயும் திறன் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிர்வகித்தல் ஆகிய ஆற்றல்களைப் பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் குணநலன்கள்
வணிகவியலாளரின் வேலையானது பெரும்பாலும் எண்களையும், புள்ளி விவரங்களையும் சார்ந்தே இருக்கும் என்பதால் எண்களைக் கையாள்வதில் தேர்ந்தவராக இருக்க வேண்டும். வேகமாக முடிவெடுக்கும் திறன், வணிகம் சார்ந்த முடிவுகளில் பல சமயங்களில் மிக வேகமாகவும் அதே சமயம் துல்லியமாக்கவும் எடுக்க வேண்டியது அவசியம். பேச்சு சாதுரியம் பெற்றிருக்க வேண்டும். மார்கெட்டிங் போன்ற துறைக்கு இந்தத் தகுதி மிகவும் முக்கியமானது.

முக்கிய படிப்புகள்
பி.காம்.,/எம்.காம்., (ஜென்ரல்ஸ், அக்கவுண்டிங் அண்ட் பினான்ஸ், கார்ப்ரேட் செக்ரெட்ரிஷிப், பேங்கிங், மார்கெட்டிங் அண்ட் @மனேஜ்மெண்ட்), பி.பி.ஏ.,/எம்.பி.ஏ., - சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., - ஏ.சி.எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகள்.

வேலை வாய்ப்புகள்
இந்தியாவில் சேவை துறை அதிக வளர்ச்சி அடைந்து வருவதாக சமீபத்திய புள்ளிய விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்நிய நாட்டு முதலீடுகள், காப்பீடுகள் போன்றவை அதிகரித்தே வரும் சூழலில் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் ஒரு வணிகவியல் நிபுணரின் தேவை இல்லாத நிறுவனம் இல்லை. ஸ்டாக் மார்க்கெட் அனலிஸ்ட், ஸ்டாக் புரோக்கர் @பான்ற வாய்ப்புகளும் உள்ளன. சி.ஏ., முடித்தவர்கள் எந்த நிறுவனத்திலும் சேராமல் சுயமாகவே நிதி ஆலோசகர்களாகவும் பணி புரியலாம்.

சிறந்த கல்வி நிறுவனங்கள்:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட், டில்லி
இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், ஐதராபாத்
ஜேம்லால் பஜாஜ் இன்ஸ்டிடியூட், மும்பை
மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட், டில்லி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us