தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மாணவர்களே எங்கள் தூதர்கள்!

மாணவர்களே எங்கள் தூதர்கள்!

மாணவர்களே எங்கள் தூதர்கள்!


ஜூன் 11, 2018 12:00 AM

ஜூன் 11, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 11, 2018 12:00 AM ஜூன் 11, 2018 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சமஸ்கிருதம் என்ற ஒரே பாடத்தைக் கொண்டு 25 ஆண்டுகளுக்கு முன் உருவான இக்கல்வி நிறுவனம், தற்போது 40க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்குவதோடு, வெள்ளி விழாவையும் கொண்டாடுகிறது!

அறிவு, கல்வி, ஆன்மிகம், பொது செயல்பாடு என அனைத்து விதத்திலும் சிறந்த மாணவர்களை உருவாக்கி, இந்த சமுதாயத்திற்கு நல்ல மனிதர்களை தரவேண்டும் என்ற குறிக்கோளுடன் இக்கல்வி நிறுவனம் செயல்படுகிறது. அதன்படி, பழமையான விஞ்ஞானம், ஞானம், கல்வி ஆகியவை இன்றைய மாணவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், படிக்கும் ஒவ்வொரு மாணவரும் நற்பண்புகளைப் பெற வேண்டும் என்பதற்காகவும், இன்றளவும் இந்திய பாரம்பரியம், கலாச்சாரம் பற்றி சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

இதன்மூலம், மாணவர்கள், மதம், இனத்தைக் கடந்து சுய விழிப்புணர்வு, உள்ளார்ந்த அமைதி, மனதில் தெளிவு, எண்ணத்தில் தெளிவு, செய்யும் ஒவ்வொரு செயலும் தெளிவு என அனைத்தையும் பெறுகின்றனர். மேலும், அருமையான சுற்றுச் சூழல், விளையாட்டுப் பயிற்சி, பாடத்திட்டத்தை கடந்த கற்றல், நற்பழக்கங்கள், அரசு பணிக்கான பயிற்சி, பலதரப்பட்ட வாய்ப்புகள், குறைந்த கட்டணத்தில் சிறந்த கல்வி என பெற்றோர் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பு எதுவாக இருந்தாலும், அது இந்தக் கல்வி நிறுவனத்தில் உள்ளது.

இத்தகைய சிறப்புகளை பெற்ற இக்கல்வி நிறுவனம், வேத காலத்தில் இருந்து பிரபலமான காஞ்சிபுரம் நகரில் செயல்படுவது மிகவும் பொறுத்தமான ஒன்று!

சமஸ்கிருதமும், இந்திய பண்பாடும் எங்கள் கல்வி நிறுவனத்தின் முக்கிய படிப்புகளாக திகழும் அதேநேரம், இன்ஜினியரிங், ஹெல்த் சயின்ஸ், அறிவியல், கலை, மேலாண்மை ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், ரோபாட்டிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் கற்பிக்கப்படுகின்றன.

ஆயுர்வேதம்
எங்களது மற்றொரு கல்வி நிறுவனமான, ஜெயந்திர சரஸ்வதி ஆயுர்வேதா கல்லூரியில் வழங்கப்படும் இந்திய மருத்துவப் படிப்பிற்கு, தேசிய அளவில் கடும்போட்டி நிலவுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு சிகிச்சை பெற இன்று மக்கள் ஆயுர்வேதாவை நாடுவதால், இந்த படிப்பிற்கான முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், உடலுக்கு புத்துணர்வூட்டும் பஞ்சகர்மா படிப்பிற்கும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

எங்கள் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள், அவர்கள் பெற்ற சிறந்த அனுபவத்தை, மற்றவர்களையும் நன்முறையில் அறியச் செய்வதால், மாணவர்களே எங்கள் கல்வி நிறுவனத்தைப் பிரபலப்படுத்தும் தூதர்களாக செயல்படுகின்றனர்!

-முனைவர். ரமணகுமார், தலைவர் -மாணவர் சேர்க்கை, ஸ்ரீ சந்தரசேகந்திரா சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா, காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us