ஜூன் 12, 2018 12:00 AM
ஜூன் 12, 2018 12:00 AM
சமீபகாலமாக பெற்றோர், மாணவர் என இரு தரப்பினராலும் அதிகளவில் விரும்பப்படும் படிப்பாக, வேளாண்மை துறை சார்ந்த படிப்புகள் திகழ்கின்றன! இன்றைய சூழலில் வேளாண்மை படிப்புகள் என்பது வயல் வரப்புகளையும் தாண்டி பல பிரிவுகளாக பரந்து விரிந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
படிப்பு நிலைகள்:
இளநிலை, முதுநிலை, எம்.பில்., - பிஎச்.டி., டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள்.
பாடப்பிரிவுகள்:
அக்ரிகல்ச்சர், ஹார்ட்டிகல்ச்சர், அக்ரிகல்ச்சுரல் பயோடெக்னாலஜி, பார்ம் மேனேஜ்மெண்ட், அக்ரோ-கெமிக்கல் அண்ட் பெஸ்ட் கண்ட்ரோல், போஸ்ட் ஹார்வஸ்ட் டெக்னாலஜி, சாயில் சயின்ஸ் அண்ட் வாட்டர் மேனேஜ்மெண்ட், செரிக்கல்ச்சர், சீட் சயின்ஸ், கிராப் பிசியாலஜி, பிளாண்ட் பிரீடிங், பயோ-பெர்ட்டிலைசர் புரொடக்சன் மற்றும் பல.
தகுதி:
இளநிலை படிப்பிற்கு, 12ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை படிப்பிற்கு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமா படிப்பிற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
நுழைவுத் தேர்வு:
இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் (ஐ.சி.ஏ.ஆர்.,) நடத்தும் தேசிய அளவிலான தகுதி தேர்வு, இத்துறையில் ஒரு முக்கியமான தேர்வாக கருதப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்தத் தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்கள், இந்தியாவில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகளில் படிக்க வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. தேசிய அளவிலான கல்லூரிகளில் சேர்க்கை பெற விரும்பும், 12ம் வகுப்பு முடித்த அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் இதில் பங்குபெறலாம்.
வேலை வாய்ப்புகள்:
வேளாண்மை படித்தவர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்று இல்லை; அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சி மையங்களிலும் பணி வாய்ப்புகளைப் பெறலாம். இந்திய அரசின் வேளாண்மை துறையில், வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதைத் தவிர ஆராய்ச்சி அமைப்புகள், பெர்ட்டிலைசர் நிறுவனங்கள், அக்ரி-பயோடெக் நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் பணியில் சேரலாம்.
சிறந்த கல்வி நிறுவனங்கள்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை
நேஷனல் டெய்ரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட், ஹரியானா
இந்தியன் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், புதுடில்லி
பஞ்சாப் அக்ரிகல்ச்சுரல் யூனிவர்சிட்டி, பஞ்சாப்
யூனிவர்சிட்டி ஆப் அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ், கர்நாடகா
