தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இன்ஜினியரிங் இன்றி உலகம் இயங்காது!

இன்ஜினியரிங் இன்றி உலகம் இயங்காது!

இன்ஜினியரிங் இன்றி உலகம் இயங்காது!


ஜூன் 29, 2018 12:00 AM

ஜூன் 29, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 29, 2018 12:00 AM ஜூன் 29, 2018 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ‘படித்த உடனேயே வேலை பெற வேண்டும்’ என்ற நோக்கத்துடனேயே பெரும்பாலான மாணவர்கள் ஒரு படிப்பை தேர்வு செய்கின்றனர்! அந்தவகையில், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, ஆதாரமாக விளங்கும் இன்ஜினியரிங் துறை சார்ந்த படிப்புகளுக்கே, அவர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தி துறையிலும் சரி, நாட்டின் ஆண்டு வருமானத்திலும் சரி, சீனாவிக்கு நிகராக செயல்பட்ட இந்தியா, இன்று பல மடங்கு பின்தங்கி உள்ளது. இத்தகைய நிலை மாற, இன்ஜினியரிங் துறையில் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தப்பட வேண்டும். அதற்கு ஏராளமான திறன் வாய்ந்த இன்ஜினியர்கள் தேவைப்படுகின்றனர்.

எந்த ஒரு இயந்திரமும் இயங்க வேண்டும் என்றால் பெட்ரோலை மட்டுமே நம்பி இருந்த சூழல், ஒரு காலத்தில் இருந்தது. இன்று சோலார், காற்று மூலமாகவும் மின்சாரத்தை பெற்று வருகிறோம். எங்களது கல்லூரியில்கூட, சோலார் பயன்படுத்துவதால் மாதம் 10 லட்சம் ரூபாய் வரை செலவு குறைந்துள்ளது.

பேட்டரியால் இயங்கும் கார்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இவ்வளவு ஏன்? தண்ணீர் மூலமாக இயங்கும் கார்களே, கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. இந்த முன்னேற்றம் தொடர்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், நிலக்கரி இல்லாமலேயே உலகம் இயங்கும். ஆனால், இன்ஜினியரிங் இன்றி உலகம் இயங்காது!

ஏனெனில், பெட்ரோலை கண்டுபிடித்ததும் ஒரு இன்ஜினியர் தான். சோலார், பேட்டரி போன்றவற்றை கண்டுபிடித்ததும் ஒரு இன்ஜினியர் தான். காலமாற்றத்திற்கும், தேவைக்கும் ஏற்ப வருங்காலத்தில் அடுத்தடுத்து, புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தப்போவதும் இன்ஜினியர் தான்.

மேலும், மனித வாழ்க்கை முறையை மேம்படுத்துவதாகவும், எளிமைப்படுத்துவதாகவும் விளங்குவது, இன்ஜினியரிங் துறையே! இந்நிலையில், உலகளவில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றில் ஆசிரியர்கள் முதலில் கற்றுத்தேர வேண்டும். அப்போதுதான், மாணவர்களிடம் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியை மாணவர்களிடம் வளர்க்க முடியும். உரிய திறன்களை மாணவர்கள் பெறும்பட்சத்தில், வேலை எளிதாக கிடைக்கும். தொழில்முனைவோராகும் வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது.

இவற்றை உணர்ந்தே, எங்கள் கல்லூரியில், திறன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். மொபைல் அப்ளிகேஷன்ஸ், ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் என பல்வேறு துறை சார்ந்த அனுபவமிக்க நிபுணர்களை, எங்கள் கல்லூரியிலேயே பணியமர்த்தி, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை, நேரடியாக மாணவர்களையே அறியச் செய்து, அதற்கேட்ப கல்லூரி புராஜெக்ட்களை செய்ய ஊக்குவிக்கிறோம். எங்களது மாணவர்களுக்கான, வேலை வாய்ப்புகளை எளிதாக்குகிறோம்! 

-முனைவர் எஸ். தங்கவேலு, தலைவர், ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us