மே 11, 2019 12:00 AM
மே 11, 2019 12:00 AM
இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் இன்றைய மாணவர்கள் உள்ளனர். இத்தருணத்தில், அவர்களுக்கு முதலில் சொல்லிக்கொள்ள விரும்புவது, ‘இன்ஜினியரிங் படிப்பதால் உள்ள அபரிமிதமான வாய்ப்புகளுக்கு வானமே எல்லை’!
வங்கி, இன்சூரன்ஸ், உற்பத்தி, மருத்துவம் என அனைத்து துறைகளுமே இன்று ’ஆட்டோமேட்டட்’ ஆகிவிட்டது. ’ஆட்டோமேட்டட்’ ஆகும் அத்தனை துறைகளிலும் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், நவீனமயமாகும் துறைகளும் சரி, தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் துறைகளும் சரி, அங்கு இன்ஜினியர்களின் பங்கு மிக அவசியம். ஏனெனில், எந்த துறையாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியான உயர்நிலை பணிகளை மேற்கொள்ள இன்ஜினியர்கள் நிச்சயம் தேவை. ஆகவே, இன்ஜினியரிங் படித்தால் நிச்சயம் வாழ்வில் வெற்றிபெற முடியும் என்பதை மாணவர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
அதேநேரம், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமையை மாணவர்கள் கல்வி கற்கும்போதே வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்ஜினியரிங் படிக்கும் 85 சதவீத மாணவர்களின் எதிர்பார்ப்பும், படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்பதே... அதனை உணர்ந்தே, எங்கள் கல்வி நிறுவனத்தில், செயல்முறை கல்வியை வழங்குகிறோம். கற்றல், கற்பித்தல் முறையையே அதற்கேட்ப மாற்றி அமைத்துள்ளோம். ஒவ்வொரு மாணவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில், அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்.
தொழில் நிறுவன தொடர்பு
மேலும், கல்லூரிகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்குமான இடைவெளியை இன்று பலரும் சுட்டிக்காட்டிவருகின்றனர். இந்த இடைவெளியை போக்கும் வகையில், தொழில் நிறுவனங்களுடன் நேரடித் தொடர்பு வைத்துள்ளோம். மாணவர்கள் அவர்களது துறை சார்ந்த தொழில்நிறுவனங்களில், தேவையான பயிற்சியை பெறும் வகையில், இரண்டு மாதங்களுக்கு 'இன்டர்ன்சிங்’ அனுப்புகிறோம்.
தொழில் நிறுவனங்களிலேயே மாணவர்கள், அவர்களது 'புராஜெக்ட்’களையும் செய்கிறார்கள். ஒரு முன்னணி தொழில்நிறுவனங்களில் எவ்வாறு ஒரு ’புராஜெக்ட்’ மேற்கொள்ளப்படுகிறதோ, அதேபோன்ற தரத்தில் மாணவரகளும் படிக்கும்போதே செய்கிறார்கள். அதனால், வேலையில் சேர்ந்த முதல்நாளில் இருந்தே நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வகையில், பணியாற்ற துவங்குகிறார்கள். இதற்கு, பாடத்திட்டத்தை கடந்து, பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.
இன்று, ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர் அவரது துறையில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதாது. இ.சி.இ., சாப்ட்வேர் ஆகிய உள்ளிட்ட இதர துறைகளிலும் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது அனைத்து இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் பொருந்தும். அதற்கேட்ப பல்துறை சார்ந்த திறன்வளர்ப்புக்கும் எங்களது கல்லூரியில் முக்கியத்துவம் அளிக்கிறோம். இத்தகைய முயற்சிகளால், பல பன்னாட்டு நிறுவனங்கள் வளாக நேர்காணலுக்கு எங்கள் கல்லூரிக்கு வருகிறார்கள்!
-முனைவர் சுதா மோகன்ராம், முதல்வர், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி, கோவை
