ஜூன் 05, 2019 12:00 AM
ஜூன் 05, 2019 12:00 AM
‘கல்வியோடு, எந்த சூழலிலும் வாழும் பக்குவத்தையும், ஒழுக்கத்தையும் மாணவர்களுக்கு அளித்தாலே போதும் மாணவர்கள், வாழ்கையில் உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவர். எட்டு ஆண்டுகளுக்கு முன், 28 பேருடன் இப்பள்ளியை துவக்கினோம். இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். சிறந்த உள்கட்டமைப்பு, விளையாட்டு மைதானங்கள், நவீன ஆய்வகங்கள், போக்குவரத்து வசதிகள் என அனைத்திலும் முதன்மையாக இப்பள்ளி திகழ்கிறது.
நன்றாக படிக்கும் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைப்பது மட்டுமல்ல; கற்றலில் பின்தங்கிய மாணவனும், சராசரி மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற இலக்கோடு பயணிக்கிறோம். பசுமையான சுற்றுச்சூழல், நவீன மயமாக்கப்பட்ட வகுப்பறைகள், தொடுதிரை அறிவுப்பலகை மற்றும் ஆய்வகங்கள் எங்களின் முக்கிய சிறப்பம்சங்கள். பாடப்புத்தகங்கள் தாண்டி இசை, பாட்டு, நடனம், யோகா, கராத்தே, செஸ், சிலம்பம் மற்றும் ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல்வேறு வகுப்புகள் மூலம், மாணவர்களின் பன்முகத்திறனை ஊக்குவித்து வருகிறோம்.
–ராதாமணி, தாளாளர், எஸ்.கே.எல்., மெட்ரிக் பள்ளி, திருப்பூர்.
நவீன ஓடுதளங்கள், கூடைப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட், பேட்மிட்டன் ஆகிய விளையாட்டுகளுக்குக்கென பிரத்யேக மைதானங்கள் இங்கே உள்ளன. மாணவ, மாணவியருக்கு விடுதிகள் உண்டு. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி, விடுதி வசதி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்வியும் தொடர்ந்து வழங்குகிறோம். விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கும் கல்வி சலுகை உண்டு.
வரும் காலத்தில், அனைத்து குழந்தைகளுக்கும் யோகா, கராத்தே, இசை வகுப்புகள் கட்டாயமாக்க உள்ளோம். புத்தக வாசிப்பு மற்றும் பொதுஅறிவு திறனை அதிகரிக்க, புத்தகங்களை தொடர்ந்து வாசிக்க வைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களின் பங்களிப்புடன் நுாலகம் அமைக்கும் திட்டம் உண்டு. வேறு எந்த பள்ளியிலும் இல்லாத வகையில், பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மாணவர்களுக்கு 'கரகம்' கற்றுத்தருகிறோம்.
மதிப்பெண்ணுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், ஒவ்வொரு மாணவனின் தனித்திறன்களை ஊக்குவித்ததாலே, பிளஸ்2 தேர்வில் தொடர்ந்து இரண்டு வருடமாக நுாறு சதவீத தேர்ச்சி சாத்தியமானது. தொழில் நிறுவனங்கள் குறித்த அறிமுகம், அனுபவத்தை அளிப்பதும் கல்வி நிறுவனங்களின் பிராதன கடமை. அந்தவகையில், இவ்வாண்டுமுதல் ‘இன்டஸ்டிரியல் விசிட்’ அழைத்து செல்ல உள்ளோம்.
இதன்மூலம் வகுப்பறையில் பெற்ற கல்வியை செயல்முறையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை மாணவர்கள் பெறுவர். ஒவ்வொரு துறை சார்ந்த திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். கொட்டிக்கிடக்கும் குழந்தைகளுக்கான விலாசமான வாய்ப்புகளை சுட்டிக்காட்டினால் போதும்; அவர்களே சுதந்திரமாக சிறகடித்து பறப்பார்கள்!
