தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நாட்டின் முதல் ஆசிரியர் பல்கலை

நாட்டின் முதல் ஆசிரியர் பல்கலை

நாட்டின் முதல் ஆசிரியர் பல்கலை


ஜூன் 06, 2019 12:00 AM

ஜூன் 06, 2019 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 06, 2019 12:00 AM ஜூன் 06, 2019 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறந்த ஆசிரியர் கல்வியை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தை, 2008ம் ஆண்டில் தமிழக அரசு துவக்கியது. 
அறிமுகம்
சென்னையில் செயல்படும் இப்பல்கலை, ஆசிரியர் கல்விக்காக பிரத்யேகமாக துவக்கப்பட்ட இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் என்ற புகழையும் பெற்றுள்ளது. தமிழகத்தில், துவக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி கல்வியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு துவக்கப்பட்ட இப்பல்கலை, ஆசிரியர்களுக்கு தரமான பயிற்சி அளிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. 
சர்வதேச தரத்தில், ஆசிரியர் கல்வியை வழங்கும் நோக்கிலான இப்பல்கலை, பாடத்திட்டம் சார்ந்த அறிவு மற்றும் திறன்களுக்கு மட்டுமின்றி, உயர்ந்த ஒழுக்கம் மற்றும் பண்பாட்டையும், சமூதாய தேவைக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஏற்ப மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிக்கோள்கள்:
* நேஷனல் கவுன்சில் பார் டீச்சர் எஜுகேஷன் அனுமதியுடன், உயர்ந்த தரத்திலான ஆசிரியர் கல்வியை வழங்குதல்.* ஆசிரியர் கல்வியில் ஆராய்ச்சி வாய்ப்புகளை மேம்படுத்துதல்* ஆசிரியர் கல்வியில் புத்தாக்க கண்டறிவது* ஆசிரியர் கல்வி பட்டத்தை மதிப்புமிக்கதாக உயர்த்துவது* ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நாட்டின் சமுதாய தேவைகளை உணர்ந்து, அவற்றை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட செய்தல்.
துறைகள்:
1. பாடத்திட்ட அறிவியல்2. மதிப்பு கூட்டுக் கல்வி3. உளவியல் கல்வி 4. தொழில்நுட்பக் கல்வி5. பாடத்திட்ட திட்டமிடல் மற்றும் மதிப்பீடு6. கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகம் ஆகிய 6 துறைகளைக் கொண்டு இப்பல்கலை செயல்படுகிறது.
இப்பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று தமிழகத்தில் செயல்படும் 600க்கும் மேற்பட்ட அரசு, தனியார், அரசு உதவிபெறும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில், 70 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
வழங்கப்படும் படிப்புகள்:
பி.எட்., - பேச்சுலர் ஆப் எஜுகேஷன்எம்.எட்., - மாஸ்டர் ஆல் எஜுகேஷன்எம்.பில்., - மாஸ்டர் ஆப் பிலாசபி 
சர்ச்சைகள்:
துணை வேந்தர் மற்றும் பேராசிரியர்கள் நியமனம் உட்பட சில சர்ச்சைகளுக்கு உள்ளாகிய இப்பல்கலையில், கடந்த  பிப்ரவரி மாதம் முதல் துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது.
விபரங்களுக்கு:
www.tnteu.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us