sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

இன்ஜினியர் இன்றி அமையாது உலகு

/

இன்ஜினியர் இன்றி அமையாது உலகு

இன்ஜினியர் இன்றி அமையாது உலகு

இன்ஜினியர் இன்றி அமையாது உலகு


ஜூன் 24, 2021 12:00 AM

ஜூன் 24, 2021 12:00 AM

Google News

ஜூன் 24, 2021 12:00 AM ஜூன் 24, 2021 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாய்ராம் கல்வி நிறுவனங்களின் சி.இ.ஓ., சாய் பிரகாஷ் கூறியதாவது:

தொழில் நிறுவனங்கள் முன்பெல்லாம், கல்வி நிறுவனங்களில் வளாக நேர்காணல் நடத்தி, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து பிறகு பணியில் அமர்த்துவர். ஆனால், தொழில் நிறுவனங்கள் இப்போதெல்லாம் அனைத்து திறன்களையும் பெற்றுள்ள மாணவர்களையே தேர்வு செய்து நேரடியாக பணிக்கு அமர்த்துவது அதிகரித்துவருகிறது. ஆகவே, கோர்ஸிரா உட்பட பல்வேறு ஆன்லைன் பயிற்சி நிறுவனங்கள், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், ரோபாட்டிக்ஸ், டிரோன் டெக்னாலஜி, அர்ட்டானாமஸ் வெகிகிள் உட்பட ஆயிரக்கணக்கான சான்றிதழ் படிப்புகளை ஆன்லைன் வாயிலாக வழங்குகின்றன. இதுபோன்று, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை தேர்வு செய்து படிக்க வேண்டும். 
இன்றைய ஆன்லைன் வாயிலான கல்வி முறை மாணவர்களுக்கு மட்டுமின்றி, பேராசிரியர்களுக்கும் புதியது. ஆனாலும், இன்றைய சூழலக்கு ஏற்ப பேராசிரியர்களும் தங்களை தயார் படுத்திக்கொண்டு மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கல்வி வழங்குகிறார்கள் என்பது வரவேற்கத்தக்கது. ஏ.ஐ.சி.டி.இ.,யும் சர்வதேச அளவில் தொழில்நுட்ப கல்வியை வழங்க பொறியியல் அறிவு, மார்க்கெட்டிங் திறன், தொடர்பியல் திறன், வாழ்க்கை முழுவதுக்குமான கல்வி கற்றல் ஆர்வம் உட்பட 12 வழிகாட்டு நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. 

பட்டம் மட்டும் போதாது

கல்லூரியில் படித்து பட்டம் பெற்று விட்டால் மட்டும் போதும், அனைத்தும் தெரிந்துவிடும் என்று மாணவர்கள் கருதாமல், வாழ்க்கை அனைத்து தருணங்களிலும் கற்றல் ஆர்வம் பெற்றிருக்க வேண்டும். புதிய தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இதர திறன்களையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ளும் விதமாக எங்கள் கல்லூரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் பிசினஸ் சிஸ்டம்ஸ் என்ற படிப்பை டி.சி.எஸ்., நிறுவனத்துடன் இணைந்து வழங்குகிறோம். இதுபோன்று, ஏ.ஆர்., வி.ஆர்., உட்பட நவீன தொழில்நுட்ப படிப்புகளை கம்ப்யூட்டர் துறை மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து துறை மாணவரகளும் கற்றுக்கொள்ள வேண்டும். 

எஸ்.டி.ஜி., 

193 நாடுகளுடன் இணைந்து, ஐக்கிய நாடுகள் அமைப்பு 'சஸ்டயினபிள் டெவெலப்மெண்ட் கோல்ஸ்’ எனும் தலைப்பில் வறுமை இல்லாமை, அனைவருக்கும் உணவு, நல்ல ஆரோக்கியம், தரமான கல்வி, பாலின சமத்துவம், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம், நல்ல வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி, தொழில் நிறுவனம், புத்தாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், சமத்துவம், நிலையான வசதிகள் கொண்ட நகரங்கள், சரியான உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடு, கடல்வாழ் உயிரின பாதுகாப்பு, அனைத்து உயிரின பாதுகாப்பு, அமைதி, சமூக நீதி மற்றும் வலிமையான அமைப்புகள், இலக்குகளை நோக்கிய கூட்டு இணைவு என 17 இலக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்த இலக்குகளை அடையவும் முயற்சி வருகின்றன.
இத்தகைய இலக்குகளால், ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கும் நிலையான நன்மை விளையும் நிலையில், இவற்றில் ஏதேனும் ஒரு இலக்குடன்  'புராஜெக்ட்’ மேற்கொள்ள வேண்டும் என்ற எங்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். மாணவர்களது ஒவ்வொரு புராஜெக்ட்’ முயற்சியிலும் அதே கல்லூரி பேராசிரியர் ஒருவர் மட்டுமின்றி, பொதுவெளியில் அந்த புராஜெக்ட் சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நிபுணர்களையும் வழிகாட்டியாக செயல்பட அறிவுறுத்துகிறோம். புத்தாக்க மற்றும் படைப்பாற்றல் மிக்க இன்ஜினியர்கள் உருவாவதற்கான இத்தகைய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்ப்பும், பலன்களும் கிடைத்து வருகிறது. சரியான திறன் பெற்றவர்களால் மட்டுமே சிறந்த தொழில்முனைவோராகவும் ஆக முடியும். 
'நீரின்றி அமையாது உலகு’ என்ற பழமொழியைப் போல 'இன்ஜினியர் இன்றி அமையாது உலகு’ என்ற சொல்லிலும் உண்மை நிறைந்துள்ளதை நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் இன்ஜினியரது பங்கு உள்ளதை நினைவு கூர்வதன் மூலம் நாம் உணரலாம். உலகை இன்னும் அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றால் இன்ஜினியர்களது புத்தாக்க திறன் மென்மேலும் அவசியம். அதற்கு சிறந்த இன்ஜினியர்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டிருக்க வேண்டும். 






      Dinamalar
      Follow us