sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

திறன்சார் கல்விக்கு அதிக முக்கியத்துவம்

/

திறன்சார் கல்விக்கு அதிக முக்கியத்துவம்

திறன்சார் கல்விக்கு அதிக முக்கியத்துவம்

திறன்சார் கல்விக்கு அதிக முக்கியத்துவம்


ஜூன் 24, 2021 12:00 AM

ஜூன் 24, 2021 12:00 AM

Google News

ஜூன் 24, 2021 12:00 AM ஜூன் 24, 2021 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திறன்சார் மற்றும் செயல்வழி கல்விக்கு தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகள் அதீத முக்கியத்துவம் அளித்து, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதால், ஏராளமான மாணவர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்றுவருகின்றனர். கல்லூரிகளின் புது மற்றும் தொடர் முயற்சிகளால், இனிவரும் காலங்களிலும் இன்ஜினியரிங் படிப்பிற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாக இருக்கும் என பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

ராமாபுரம் எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் கதிரவரன் கூறியதாவது:

இன்ஜினியரிங் படிப்பிற்கு அனைத்து துறைகளிலும் வாய்ப்புகள் எப்போதும் நிறைந்துள்ளன என்பதற்கு தற்போதைய கொரோனா சூழலும் மிகச் சிறந்த உதாரணம். இன்றைய பெருந்தொற்று போன்று அவசர நிலையில் தடுப்பூசியை கண்டுபிடிப்புடன் அப்பிரச்னை முடிவடைந்துவிடவில்லை. குறுகிய காலத்தில் 120 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்து, போக்குவரத்து வசதிகளுடன் ஓர் இடத்தில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கொண்டு சென்று பாதுகாப்பாக சேமித்து வைக்கவும், உரிய நேரத்தில் மக்களுக்கு அவை சென்றடைய செய்வதும் ஆகிய சவால்களை முறையாக கையாள இன்ஜினியரிங் திட்டமிடல் மிக அவசியம். இத்தகைய மாபெரும் பிரச்னைக்கு தீர்வுகாண்பது இன்ஜினியரிங் திட்டமிடல் இன்றி சாத்தியமில்லை.
வருகின்ற காலங்களிலும் இன்ஜினியர்களது தேவை பலமடங்கு அதிகரிக்கவே செய்யும். ஆகவே, மாணவர்களது பிரதான தேர்வும் இன்ஜினியரிங் துறையாகத்தான் இருக்கும். தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில், பல இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து அதிகமான இன்ஜினியர்களை உருவாக்கியதால் தான் இன்று, குறைந்த செலவில் அதிகமான பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிகிறது. மேலும், கல்வி, வங்கி, சுகாதாரம், ராணுவம், ரயில்வே, வேளாண்மை, உற்பத்தி, போக்குவரத்து, ஆராய்ச்சி, மருத்துவம், விண்வெளி, அணு ஆற்றல், சோலார் மற்றும் மேட் இன் இந்தியா’ திட்டம் என பல்வேறு துறைகளிலும், திட்டங்களிலும் இன்ஜினியரிங் படித்தவர்களின் பங்கும், தேவையும் மிக அதிகமாக உள்ளது. 
அனைத்து வளர்ந்த வெளிநாடுகளில் உள்ள பல முன்னணி நிறுவனங்களிலும் இந்திய இன்ஜினியர்கள் தான் அதிகமான எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். சர்வதேச அளவில் பிரச்னைகளுக்கு இன்றளவும் தீர்வு காண்பதும் இந்திய இன்ஜினியர்கள் தான். இதன் மூலம், நமது இன்ஜினியரிங் கல்வியின் தரத்தையும், நமது இன்ஜினியர்களின் திறமையையும் உணரலாம். 
ஆன்லைனில் செயல்முறை பயிற்சி

பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறனை, செயல்முறை பயிற்சியின் வாயிலாகவே மாணவர்களுக்கு பெறுகிறார்கள். இவற்றை, இன்ஜினியரிங் படிக்கும் 4 ஆண்டுகால கல்வியின் போதே கல்லூரிகளால் வழங்க முடியும். அதனுடன், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை தேவையான பயிற்சிகளின் வாயிலாக, மாணவர்களுக்கு அளித்தால், கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான இடைவெளியை நிவர்த்தி செய்து, அதிக வேலை வாய்ப்பை வழங்க முடியும். 
இன்ஜினியரிங் மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி மிக மிக அவசியம். அதன் மூலமாகவே, அதிகமான கற்றல் மற்றும் திறன் வளர்ப்பு நிகழ்வதால், இன்றைய ஊரடங்கு காலத்தில், இ-லேப் மற்றும் இ-ஸ்கில் ஆகிய மாற்றுவழிகளால், மாணவர்கள் நேரடியாக செயல்முறை பயிற்சியை மேற்கொள்வதைப் போன்ற அதே உணர்வை பெறச் செய்ய முடியும். ஆன்லைன் வாயிலாகவே செயல்முறை தேர்வையும் நடத்தலாம். புதியதாக, கல்லூரிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு 'அசெசிங் டூல்’ எனும் ஆன்லைன் தேர்வு மென்பொருள் வாயிலாக அவர்களின் கல்வி நிலையை அறிந்து அதற்கு ஏற்ப பயிற்சி அளிக்கமுடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆர்.எம்.கே., கல்விக் குழும தலைவர் மற்றும் தமிழ்நாடு தனியார் சுயநிதி பொறியியல் கல்லுரி சங்க தலைவர் முனிரத்னம் கூறியதாவது:

திறன்சார் பயிற்சிகளை அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாவட்டம் வாரியாக நேரடியாக சென்று கல்லூரிகளுக்கு அறிவுறுத்துகிறோம். திறன்சார் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவை சார்ந்த பயிற்சிகளை பாடத்திட்டத்துடன் சேர்த்து வழங்குவதால், கடந்த சில ஆண்டுகளாக, முன்பை விட அதிகமான வேலை வாய்ப்பை இன்ஜினியரிங் படிக்கும்போதே மாணவர்கள் பெற்றுவருகின்றனர். 
கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இடையேயான இணைந்த செயல்பாடுகளால் மாணவர்களின் திறமை மேம்படுவதுடன் வேலை வாய்ப்புகளும் பிரகாசமாகின்றன. இதுபோன்ற தொடர் முயற்சிகளால், தரமான கல்வி நிறுவனங்கள் 90 சதவீதக்கும் அதிகமான வேலைவாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குகின்றன.
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என அனைத்து இன்ஜினியரிங் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us