sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

500 இலவச ஆன்லைன் படிப்புகள்

/

500 இலவச ஆன்லைன் படிப்புகள்

500 இலவச ஆன்லைன் படிப்புகள்

500 இலவச ஆன்லைன் படிப்புகள்


ஜூன் 24, 2021 12:00 AM

ஜூன் 24, 2021 12:00 AM

Google News

ஜூன் 24, 2021 12:00 AM ஜூன் 24, 2021 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாடுமுழுவதிலும் பல்வேறு நகரங்களில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,) பிற முன்னணி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து 500க்கும் மேற்பட்ட குறுகிய கால சான்றிதழ் படிப்புகளை ஆன்லைன் வாயிலாக இலவசமாக வழங்குகிறது!
இன்ஜினியரிங், தொழில்நுட்பம், கணிதம், கலை, அறிவியல், சட்டம், மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளில், தங்களது திறன்களை மெருகேற்றிக் கொள்ள விரும்புபவர்களுக்காக, ’நேஷனல் புரோகிராம் ஆன் டெக்னலாஜி என்கேன்ஸ்ட் லேர்னிங்’- என்.பி.டி.இ.எல்., வாயிலாக இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
துறைகள்
ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங், ஆர்கிடெக்சர் அண்ட் பிளானிங், பயோடெக்னாலஜி அண்ட் பயோஇன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், கெமிஸ்டரி, சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், டிசைன் இன்ஜினியரிங், எலட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், ஹுமானிட்டீஸ் அண்ட் சோசியல் சயின்சஸ், லா,  மேனேஜ்மெண்ட், எக்னாமிக்ஸ், மேத்மெடிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங், மைனிங் இன்ஜினியரிங், ஓசன் இன்ஜினியரிங், பிசிக்ஸ், டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் போன்ற பல்வேறு துறை பிரிவுகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன. 

படிப்புகள்
ஏர் கிராப்ட ஸ்டெபிலிட்டி அண்ட் கன்ட்ரோல், ஹவுசிங் பாலிசி அண்ட பிளானிங், அர்பன் பிளானிங், விசுவல் கம்யூனிகேஷன் விசைன் பார் டிஜிட்டல் மீடியா, பயோமெடிக்கல் நானோடெக்னாலஜி, இன்டஸ்டிரியல் பயோடெக்னாலஜி,  செல் கல்சுரல் டெக்னாலஜி, ரிவர் இன்ஜினியரிங், அனலிட்டிக்கல் கெமிஸ்டரி, கெமிக்கல் அண்ட் பயோலஜிக்கல், புராஜெக்ட் பிளானிங் அண்ட் கன்ட்ரோல், டிசைன் அண்ட் ஸ்டீல் ஸ்டக்சரல், கிளவுட் கம்ப்யூட்டிங், புரோகிராமிங் இன் சி++, ஜாவா, கிளவுட் கம்ப்யூட்டிங், இண்டர்நெட் ஆப் திங்ஸ், சாப்ட்வேர் டெஸ்டிங், சோசியல் நெட்வோர்க்ஸ், கன்ட்ரோல் இன்ஜினியரிங், டீப் லேர்னிங், டேட்டா சயின்ஸ் பார் இன்ஜினியர்ஸ், பிக் டேட்டா கம்ப்யூட்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், டிஜிட்டல் இமேஜ் புராசசிங், சாப்ட் ஸ்கில், ரோபாட்டிக்ஸ் உட்பட 500க்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகள், ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளன். 
கல்வி நிறுவனங்கள்
சென்னை, டெல்லி, மும்பை, கவுகாத்தி, ஐதராபாத், கான்பூர், கரக்பூர், ரூர்க்கி ஐ.ஐ.டி.,கள், பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., சி.எம்.ஐ., என்.எல்.எஸ்.ஐ.யு., ஐ.எம்.எஸ்.சி., உட்பட நாட்டின் பல்வேறு தலைசிறந்த கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஆகியவை இணைந்து ஆன்லைன் வாயிலாக இந்த படிப்புகளை வழங்குகிறது. மேற்குறிப்பிட்ட நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர்கள், நிபுணர்கள் வழங்கும் விரிவுரை வகுப்புகளை, என்.பி.டி.எல்., இணையதளம் வழியே பங்கேற்று படித்து பயன்பெறலாம்.
படிப்பு காலம்:
4 வாரங்கள் முதல் 12 வாரங்கள் வரை
சான்றிதழ் 
இந்த படிப்புகளை யார் வேண்டுமானாலும் இலவச கற்கலாம். சான்றிதழ் பெற விரும்புவர்கள் குறைந்த தேர்வு கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
விபரங்களுக்கு:
www.nptel.ac.in






      Dinamalar
      Follow us